தாலிபான்களுக்கு ஆதரவு: அஷ்ரப் கனிக்கு அதிர்ச்சி தந்த அவரது சகோதரர்!

அஷ்ரப் கனி

அஷ்ரப் கனியின் சகோதரர் ஹஷ்மத் கனி அக்மத்சாய், தற்போது தாலிபான்களுக்கு ஆதரவு அளித்து அவர்களுடன் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  • Share this:
ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பிச் சென்ற முன்னாள் அதிபர் அஷ்ரப் கனியின் சகோதரர், தாலிபான்களை ஆதரித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அமெரிக்கப் படைகள் வெளியேற்றத்துக்கு பின் ஆப்கானிஸ்தானின் நிலைமை தலைகீழ் ஆகிவிட்டது. பத்தே நாட்களில் ஒவ்வொரு நகரையும் அசுர வேகத்தில் கைப்பற்றிய தாலிபான்களுடன் பெரும்பாலும் அரசுப் படைகள் மோதவே இல்லை என்று தான் சொல்லவேண்டும். காந்தகார், ஜலாலாபாத் என முக்கிய நகரங்களை கைப்பற்றி அதிர்ச்சி தந்த தாலிபான்கள் கடந்த ஞாயிறன்று தலைநகர் காபுலையும் கைப்பற்றினர். இதன் மூலம் ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானும் தாலிபான்கள் கைக்குள் சென்றது.

காபுல் நகரில் தாலிபான்கள் கால்பதித்த தகவல் கிடைத்தவுடன் பாதுகாப்பு கருதி ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி (வயது 72) தஜிகிஸ்தானுக்கு தப்பியோடினார். அங்கு அவரின் விமானம் தரையிறங்க அனுமதிக்கப்படாததால் ஓமன் சென்று அங்கிருந்து தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சம் அடைந்திருக்கிறார்.

Also read:  ஓலா S1 pro Vs ஏதெர் 450X: எது சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்? – ஒரு முழுமையான ஒப்பீடு..

அஷ்ரப் கனி சமீபத்தில் அளித்துள்ள பேட்டில் காபுலில் ரத்த ஆறு ஓடுவதை தவிர்க்கவே நாட்டை விட்டு தப்பியதாகவும், தான் அங்கிருந்து பணம் எதையும் எடுத்துக் கொண்டு வரவில்லை எனவும் தான் செருப்பு போட கூட நேரம் இல்லாமல் அவசர அவசரமாக கிளம்பியதாகவும் கூறினார்.

தாலிபான்களுக்கு ஆதரவு


இந்நிலையில் அஷ்ரப் கனியின் சகோதரர் ஹஷ்மத் கனி அக்மத்சாய், தற்போது தாலிபான்களுக்கு ஆதரவு அளித்து அவர்களுடன் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Also read:   காங்கிரஸ் காரனுக்கு கூட தரவில்லை திமுகவினருக்கு 7 சீட்டுகளை கொடுத்தேன் – காங்கிரஸ் செயல் தலைவர்

குச்சிஸ் இன கவுன்சில் தலைவராக இருந்த ஹஷ்மத் கனி அக்மத்சாய், தாலிபான் தலைவர் கலீல் உர் ரெஹ்மான் மற்றும் மதத் தலைவர் முஃப்தி மக்மூத் ஸாகிர் முன்னிலையில் தாலிபான்களுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தனது சகோதரே தாலிபான்களுடன் இணைந்த தகவல் அறிந்து அஷ்ரப் கனியும் அதிர்ச்சியடைந்திருப்பதாகவும், இது குறித்த தனது மனவேதனையை அவர் வெளிப்படுத்தியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தாலிபான்கள் காபுலை கைப்பற்றிய பின்னர் பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படும், அவர்கள் வேலை பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என கூறியிருந்தனர். ஆனால் தற்போது அங்கு நிலைமை தலைகீழாக மாறியிருப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது,

 
Published by:Arun
First published: