Forbes பெண் டெக் ஜாம்பவான்கள்- டாப் பட்டியலில் 4 இந்திய வம்சாவளி பெண்கள்

சர்வதேச அளவில் முன்னோடிகளாக நிற்கிறார்கள் இப்பெண்கள் என்று அமெரிக்காவின் டாப் 50 டெக் ஜாம்பவான்களை Forbes அறிமுகப்படுத்தி உள்ளது.

Web Desk | news18
Updated: December 1, 2018, 2:03 PM IST
Forbes பெண் டெக் ஜாம்பவான்கள்- டாப் பட்டியலில் 4 இந்திய வம்சாவளி பெண்கள்
சர்வதேச அளவில் முன்னோடிகளாக நிற்கிறார்கள் இப்பெண்கள் என்று அமெரிக்காவின் டாப் 50 டெக் ஜாம்பவான்களை Forbes அறிமுகப்படுத்தி உள்ளது.
Web Desk | news18
Updated: December 1, 2018, 2:03 PM IST
பிரபல் ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை அமெரிக்காவின் டாப் 50 பெண் டெக் ஜாம்பவான்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வம்சாவளியைச் சார்ந்த நால்வர் இடம்பெற்றுள்ளனர்.

சிஸ்கோ நிறுவன தலைமை தொழில்நுட்ப அதிகாரி பத்மஸ்ரீ வாரியர், உபெர் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் கோமல் மந்தானி, கன்ஃப்லூயண்ட் நிறுவன துணை நிறுவனர் நேஹா நர்காதே மற்றும் ட்ராப்ரிஜ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி காமாட்சி சிவராமகிருஷ்ணன் ஆகிய நான்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்கள் Forbes பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

”பெண்கள் எதிர்காலத்துக்காகக் காத்திருப்பதில்லை. கடந்த மூன்று தலைமுறைகளாக முன்னோக்கிய சிந்தனைகளுடன் பல தொழில்நுட்ப நிறுவனங்களை பின் தள்ளி சர்வதேச அளவில் முன்னோடிகளாக நிற்கிறார்கள் இப்பெண்கள்” என அமெரிக்காவின் டாப் 50 டெக் ஜாம்பவான்களை Forbes அறிமுகப்படுத்தி உள்ளது.

இப்பட்டியலின் டாப் இடங்களில் IBM சிஇஓ கின்னி ரோமெட்டி மற்றும் NETFLIX நிர்வாகி அனா அரோன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் பார்க்க: சூப்பர் மார்கெட்டில் பொருட்கள் வாங்கிவிட்டு பணம் தராமல் அடாவடி
First published: December 1, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்