முகப்பு /செய்தி /உலகம் / உலகின் 100 பவர் ஃபுல் பெண்கள் பட்டியல்... நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம்பிடித்தார்

உலகின் 100 பவர் ஃபுல் பெண்கள் பட்டியல்... நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம்பிடித்தார்

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

18வது ஆண்டாக ஃபோர்ப்ஸ் சக்திமிக்க 100 பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. நடப்பாண்டில் இடம்பெற்றவர்களில் 40 பேர் சி.இ.ஓ.க்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பிரபல அமெரிக்க வர்த்தக இதழான ஃபோர்ப்ஸ் உலகின் சக்திமிக்க 100 பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் இடம்பெற்றுள்ளார். அவரைப் பாராட்டி ஃபோர்ப்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரபல அமெரிக்க வர்த்தக இதழான ஃபோர்ப்ஸ் உலகின் சக்திமிக்க 100 பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் இடம்பெற்றுள்ளார். அவரைப் பாராட்டி ஃபோர்ப்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆண்டுதோறும், 100 சக்தி மிக்க பெண்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டு, பெண்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இதில் அரசியல்வாதிகள், கொடையாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், அமைச்சர்கள், அதிபர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், மருத்துவர்கள், சி.இ.ஓ.-க்கள் என பல்வேறு தரப்பினர் இடம்பெறுகின்றனர்.

Also Read : அரசு பணியாளர்களுக்கு வாரத்தில் நான்கரை நாட்கள் மட்டுமே வேலை... வருகிறது புதிய சட்டம்

இந்தாண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பவர் மெக்கன்ஸி ஸ்காட். இவர், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோசின் முன்னாள் மனைவி. 51 வயதாகும் ஸ்காட், தொழில் ரீதியாக நாவல் எழுத்தாளர் ஆவார். 1993-ல் ஜெஃப் பெசோசை திருமணம் முடித்த ஸ்காட், 2019-ல் விவாகரத்து செய்து கொண்டார். ஜெஃப் பெசோசின் வளர்ச்சிக்கு முதல் காரணமாக இருப்பவர் இந்த மெக்கன்ஸி ஸ்காட். இவரது சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் ரூ. 4.70 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மெர்க்கல் முதலிடத்தில் இருந்தார்.

2-ம் இடத்தை அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பிடித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு 37-வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'இந்தியாவின் முதல் முழு நேர நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆவார். அரசியலில் தீவிரமாக பணியாற்றுவதற்கு முன் அவர் பிரிட்டனை சேர்ந்த வேளாண் பொறியாளர்கள் கூட்டமைப்பிலும், பிபிசி உலக சேவையிலும் பணியாற்றியிருந்தார். தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகவும், நிர்மலா சீதாராமன் திறமையாக செயல்பட்டிருந்தார்' என்று கூறப்பட்டுள்ளது.

Also Read : 15 மாதமாக விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ்... வெற்றிப் பேரணி அறிவிப்பு

18வது ஆண்டாக ஃபோர்ப்ஸ் சக்திமிக்க 100 பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. நடப்பாண்டில் இடம்பெற்றவர்களில் 40 பேர் சி.இ.ஓ.க்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தான்சானியா அதிபர் சமியா சுலுகு ஹசன், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

பிரபல ஊடகவியலாளர் ஓப்ரா வின்ஃப்ரேவுக்கு 23-வது இடமும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 43-வது இடமும், டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்சுக்கு 85-வது இடமும் அளிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Forbes, Nirmala Sitharaman