முகப்பு /செய்தி /உலகம் / இனி ஐநாவில் ஹிந்தி ஒலிக்கும்!

இனி ஐநாவில் ஹிந்தி ஒலிக்கும்!

ஐநாசபையில் இனி ஹிந்தி

ஐநாசபையில் இனி ஹிந்தி

UNGA resolution to add 6 non official languages: முதன்முறையாக, ஐநா பொதுச் சபையில் இந்தி உள்ளிட்ட 6 அதிகாரபூர்வமற்ற மொழிகளை சேர்க்கும் பன்மொழித் தீர்மானம்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஐநா-வின் நிரந்திர உறுப்பினர்களான சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவின் மொழிகளான சைனீஸ், பிரெஞ்சு,ரஷ்யன்,ஆங்கிலத்தோடு ஸ்பானிஷ்,அரேபிய மொழிகள் என ஆறு மொழிகள் ஐக்கிய நாடுகளின் அதிகாரபூர்வ மொழிகளாக விளங்கி வருகின்றன. ஐநாவின் தீர்மானங்கள் , தீர்ப்புகள், வெளியீடுகள் எல்லாம் பெரும்பாலும் இந்த 6 மொழிகளிலேயே வெளியிடப்பட்டு வருகின்றன.

ஆனால் ஐநாவின் செயல்பாடுகளை பரந்த மக்களிடையே கொண்டு செல்ல இந்த மொழிகள் பத்தாது. இந்த மொழி அறியாத மக்களிடமும் ஐநாவின் செயல்பாடுகள் சென்று சேர வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு முக்கிய முடிவு கடந்த வாரம் எடுக்கப்பட்டுள்ளது.

ஐநாவில் பன்மொழிகளை மேம்படுத்துவதற்காக, ஐரோப்பிய நாடாகிய அன்டோர்ரா முன்மொழிய , இந்தியா உள்ளிட்ட 80 நாடுகள் வழி மொழிய ஐநாவின் அதிகாரபூர்வ 6 மொழிகளோடு அதிகாரபூர்வமற்ற 6 மொழிகளை சேர்க்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஐநாவின் 193 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஒப்புதலும் அளித்துவிட்டது.

இதனால் இனி வரும் நாட்களில், ஐநா பொதுச்செயலாளரின் சில முக்கிய தகவல்தொடர்புகள் மற்றும் செய்திகளை அதிகாரப்பூர்வமற்ற மொழிகளான போர்த்துகீசியம், ஹிந்தி, கிஸ்வாஹிலி, பாரசீகம், பங்களா மற்றும் உருது போன்றவற்றில் வெளியிடப்படும். உலகளாவிய தொடர்புத் துறையின் முயற்சிகளுக்கு இந்தத் தீர்மானம் வழி வகுக்கும்.

இந்தியாவின் துணை நிரந்தரப் பிரதிநிதி ஆர்.ரவீந்திரன், ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய தொடர்புத் துறையின் துணை இயக்குநர் மற்றும் அதிகாரி (செய்தி மற்றும் ஊடகப் பிரிவு) மிதா ஹோசாலியிடம் ஐநாவிற்கான இந்திய நன்கொடை காசோலையை ஒப்படைத்தார். ஐக்கிய நாடுகள் சபையில் இந்தி மொழியை விரிவுபடுத்த இந்திய அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இந்திய தூதரகம் கூறியது.கடந்த மாதம், ஐக்கிய நாடுகள் சபையில் ஹிந்தி பயன்பாட்டைத் தொடர்ந்து விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளுக்கு இந்தியா 800,000 அமெரிக்க டாலர்களை வழங்கியது.

கண்ணி வெடிகளை அகற்றினால் கருங்கடலில் கோதுமை செல்லலாம்!

2018 ஆம் ஆண்டு முதல், ஐநாவின் இணையதளம் மற்றும் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் சமூக ஊடககங்கள் மூலம் இந்தியில் ஐநா செய்திகள் பரப்பப்படுகின்றன. UN செய்திகள்-இந்தி ஆடியோ புல்லட்டின் (UN Radio) ஒவ்வொரு வாரமும் வெளியிடப்படுகிறது. இதன் இணைய இணைப்பு UN ஹிந்தி செய்தி இணையதளத்தில் உள்ளது. பிப்ரவரி 1, 1946 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் முதல் அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை திருமூர்த்தி நினைவு கூறும்போது, ஐநா உலக மக்களுக்கு அதன் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து முழுமையாக தெரிவிக்கப்படாவிட்டால் ஐக்கிய நாடுகள் சபையால் அதன் நோக்கங்களை அடைய முடியாது என்றார் .

First published:

Tags: Hindi, India, United Nation