Home /News /international /

உலகின் குறைந்த செலவிலான மருத்துவ சுற்றுலாவுக்கான இடமாக இந்தியா திகழ்கிறது : எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம்

உலகின் குறைந்த செலவிலான மருத்துவ சுற்றுலாவுக்கான இடமாக இந்தியா திகழ்கிறது : எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம்

எஸ்இஓ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை

எஸ்இஓ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை

உலகின் குறைந்த செலவிலான மருத்துவ சுற்றுலாவுக்கான இடமாக இந்தியா உள்ளது என பிரதமர் மோடி எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பேசியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • inter, Indiasamarkandsamarkand
    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சிமாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகர் சமர்கண்ட்டில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த உச்சிமாநாட்டில், பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் விரிவாக்கம், வர்த்தகம், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் சுற்றுலா ஆகிய அம்சங்களை தலைவர்கள் விவாதித்தனர்.

    உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது:- "உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய பொருளாதார மீட்டுருவாக்க சவால்களை எதிர்கொண்டுள்ளபோது, இந்த அமைப்பின் பங்கு மிக முக்கியம் வாய்ந்ததாக மாறியுள்ளது. எஸ்சிஓ உறுப்பு நாடுகள் உலக ஜிடிபியில் சுமார் 30 சதவீதத்தை பங்களிக்கின்றன. உலக மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் எஸ்சிஓ நாடுகளில் வசிக்கின்றனர். எஸ்சிஓ உறுப்பு நாடுகளுக்கு இடையே பெரும் ஒத்துழைப்பு, பரஸ்பர நம்பிக்கை ஆகியவற்றுக்கு இந்தியா ஆதரவளிக்கிறது. பெருந்தொற்று, உக்ரைன் பிரச்சனை ஆகியவை உலக விநியோக சங்கிலியில் ஏராளமான தடைகளுக்கு காரணமாகி உள்ளன. இதன் காரணமாக உலகம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எரிசக்தி மற்றும் உணவு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

    இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்றுவதில் நாங்கள் முன்னேற்றம் கண்டுள்ளோம். இந்தியாவின் இளம், திறமைமிக்க பணிப்படை இயல்பாகவே போட்டியை உருவாக்கி உள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் இந்தாண்டு 7.5 சதவீதமாக வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களில் அதிக வளர்ச்சியை கண்டுவரும் நாடு இந்தியா தான். மக்களை மையப்படுத்திய வளர்ச்சி மாதிரியில் தொழில்நுட்பத்தை முறையாக பயன்படுத்துவதற்கு பெருமளவில் கவனம் செலுத்தப்படுகிறது.

    ஒவ்வொரு துறையிலும் புதுமையை நாங்கள் ஆதரித்து வருகிறோம். இன்று இந்தியாவில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்கள் உள்ளன. இதில் 100க்கும் மேற்பட்டவை யுனிகான் நிறுவனங்கள், எங்கள் அனுபவம் இதர எஸ்சிஓ நாடுகள் பலவற்றுக்கு பயனுள்ளதாக இருக்கும். உலகின் குறைந்த செலவிலான மருத்துவம் மற்றும் ஆரோக்கிய சுற்றுலாவுக்கான இடமாக இந்தியா உள்ளது.

    இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு முன்கூட்டியே பிறந்தநாள் வாழ்த்து சொல்ல மறுத்த ரஷ்ய அதிபர் புடின் - வீடியோ

    உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருந்துகளுக்கான உலக மையம் குஜராத்தில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. இது உலக சுகாதார அமைப்பின் முதலாவது மற்றும் ஒரே பாரம்பரிய மருத்துவ மையமாகும். எஸ்சிஓ நாடுகளுக்கு இடையே பாரம்பரிய மருத்துவ ஒத்துழைப்பை நாம் அதிகரிக்க வேண்டும். இதற்காக பாரம்பரிய மருத்துவம் குறித்த புதிய எஸ்சிஓ பணிக்குழுவை அமைக்க இந்தியா முன்முயற்சி எடுக்கும்." என்று பிரதமர் மோடி பேசினார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: PM Modi, Trade

    அடுத்த செய்தி