Home /News /international /

பிரிட்டன் ராணி மறைவிற்கு பின் நாட்டிற்கு வரும் பல முக்கிய மாற்றங்கள்

பிரிட்டன் ராணி மறைவிற்கு பின் நாட்டிற்கு வரும் பல முக்கிய மாற்றங்கள்

இரண்டாம் எலிசபெத்

இரண்டாம் எலிசபெத்

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் நேற்று மறைந்தார். அவர் மறைவை தொடர்ந்து, இங்கிலாந்து நாட்டில் பல மாற்றங்கள் வர உள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • inter, IndiaEnglandEnglandEnglandEnglandEnglandEngland
    பிரிட்டன் ராணியாக 70 ஆண்டுகள் கோலோச்சிய இரண்டாம் எலிசபெத்தின் உருவப்படம் பொருத்திய அனைத்தையும் மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் உள்ள கொடிகள் முதல் கடற்படை கப்பல்களில் உள்ள கொடிகள் வரை இரண்டாம் எலிசபெத்தின் சின்னமான E11R பொறிக்கப்பட்டிருக்கும். அதாவது Elizabeth the two Regina என்பதன் சுருக்கம் ஆகும் . ராணுவம், தீயணைப்புத்துறை ஆகியவற்றில் E flags என்றழைக்கப்படும் ராணியின் கொடிகள் உள்ளன. ராணியை தலைவராக ஏற்றுக் கொண்ட நாடுகளான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா நாடுகளிலும் E flags உள்ளன.

    பிரிட்டனில் புழக்கத்தில் உள்ள, எலிசபெத்தின் முகத்துடன் கூடிய 64 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுக்களை மாற்ற வேண்டும். மிகவும் எளிதாக மாற்றம் பெற கூடிய ஒன்று என்றால், அது அந்நாட்டின் தேசிய கீதம் தான். தற்போது அங்கு கடவுளே எங்கள் கருணையுள்ள ராணியைக் காப்பாற்றுங்கள் என்ற பொருள் படும் God save our gracious Queen என்று பாடப்படுகிறது. இதனை, கடவுளே எங்கள் கருணையுள்ள மன்னரை காப்பாற்றுங்கள் என மாற்ற வேண்டும். இதேப்போல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனி மன்னர் பெயரில் பதவியேற்பர்.

    Also Read : திமுக எம்.எல்.ஏ.க்கள் தன்னுடன் பேசுவதாக எடப்பாடி பழனிச்சாமி காமெடி செய்கிறார் : முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி

    ராணியை தலைவராக ஏற்றுக்கொண்டுள்ள 14 நாடுகளில் உள்ள அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நாடுகளில் ராணியை தலைவராக ஏற்றுக்கொள்வதாக அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. ராணியின் வாரிசை தலைவராக ஏற்பதாக திருத்தம் செய்ய வேண்டும்.

    ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா நாடுகளில், புதிய மன்னரை தானாகவே தலைவராக ஏற்றுக் கொள்ளும் வகையில் சட்டம் உள்ளது.

    Also Read : நாயகன் மீண்டும் வர்றான்.. நீ இன்னும் மாறவே இல்ல அண்ணாமலை - வைரலாகும் விராட் மீம்ஸ்

    பிரிட்டனின் புதிய மன்னர், பாஸ்போர்ட் இன்றி எந்த நாட்டிற்கும் பயணம் செய்யலாம். அவருக்கு வாகனம் ஓட்டுவதற்கான உரிமமும் தேவையில்லை. ராணி இரண்டாம் எலிசபெத்தின் பிறந்த தினம் ஆண்டுக்கு இருமுறை கொண்டாடப்பட்டு வந்தது. அவரது அதிகாரபூர்வ பிறந்த தினம் ஏப்ரல் 21- ஆம் தேதியை, அரசு குடும்பத்தினர் மட்டும் கொண்டாடுவர். நாட்டு மக்களுக்கு ஜூலை மாதத்தின் இரண்டாவது செவ்வாய் கிழமை ராணியின் பிறந்த தினம் கொண்டாடப்படும். அதேப்போல் சார்லஸ்-சின் பிறந்த தினம் நவம்பர் 14- ஆம் தேதி ஒருமுறையும் கோடை காலத்தில் ஒருமுறையும் கொண்டாடப்படும்.

    பிரட்டன் மன்னர், தேர்தலில் நிற்கவோ, வாக்களிக்கவோ கூடாது. நாட்டின் தலைவர் என்ற முறையில் அவர் கட்சி சார்பு நிலையை எடுக்காமல் நடுநிலையாக இருக்க வேண்டும்.

    பிரிட்டன் மன்னர், மக்களை மட்டும் ஆள்வதில்லை. நாடு முழுவதில் உள்ள வாத்துகள், ஷாட் எனப்படும் மீன் வகை, டால்பீன்கள், திமிங்கலங்கள் என அனைத்தும் மன்னருக்கே சொந்தமாகும்.
    Published by:Raj Kumar
    First published:

    Tags: Dead, England, Queen Elizabeth

    அடுத்த செய்தி