2022-ல் வட கொரியாவின் உணவு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் கிம்ஜோங் உன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறிள்ளார்.
சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளுக்கு பெயர் போன வடகொரிய அதிபர், விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தி சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
Also Read : 3000 ஆண்டு பழமையான மம்மி உடலுக்கு உருவம்! தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அராய்ச்சியாளர்கள் முயற்சி
வடகொரியாவில் தற்போது மிகப்பெரும் அளவுக்கு உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, எவ்வளவு விலைக்கு விற்பனையானாலும் கொடுக்க பணம் இருக்கிறது, ஆனால் உணவுப் பொருள் இல்லை என்ற நிலைமைக்கு வட கொரியா சென்றது.
நிலைமை இப்படி இருக்க, அணு ஆயுதங்களை புதிது புதிதாக அந்நாடு உருவாக்கி பரிசோதனை செய்து வருவது சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் புத்தாண்டில் நாட்டின் பாதுகாப்பு, தூதரக உறவு உள்ளிட்டவற்றை தாண்டி உணவு பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது-
Also Read : Omicron| டெல்டாவையும் மிஞ்சி விட்டது ஓமைக்ரான், பாதிப்பு கடுமையாக இருக்கும்- டாக்டர் ஃபாசி எச்சரிக்கை
பொதுமக்கள் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்னைகளுக்கு தீர்வு காண அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். கொரோனா பிரச்னை முக்கியமான சவால். அதனை எதிர்கொள்வதற்கு அரசு கூடுதல் நடவடிக்கை எடுக்கும். கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டிருப்பது, வட கொரியா தனது ராணுவ பலத்தை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும் என்பதை உணர்த்துவதாக உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 2-ம் கிம் ஜோங்கின் மறைவுக்கு பின்னர் கிம் ஜோங் உன் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வட கொரிய அதிபர் பொறுப்பில் இருந்து வருகிறார். சர்வதேச விதிகளை மீறி வட கொரியா பலமுறை அணு ஆயுத சோதனைகளை நடத்தியுள்ளது. இதன் காரணமாக வல்லரசு நாடுகள் உள்பட பல்வேறு நாடுகள் வடகொரியா மீது பொருளாதார தடையை விதித்துள்ளன.
கடந்த 2019-ல் வட கொரிய அதிபர் கிம்முக்கும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து, அடுத்து நடைபெற்ற சர்வதேச கூட்டங்களில் வடகொரியா பங்கேற்காமல் தவிர்த்து வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: North korea