ஹோம் /நியூஸ் /உலகம் /

கொரோனாவுக்கு முந்தைய காலத்தைவிட சீனாவுக்கு செல்ல விமானக் கட்டணம் 10 மடங்கு அதிகம்- தவிக்கும் பயணிகள்

கொரோனாவுக்கு முந்தைய காலத்தைவிட சீனாவுக்கு செல்ல விமானக் கட்டணம் 10 மடங்கு அதிகம்- தவிக்கும் பயணிகள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கொரோனாவுக்கு முந்தைய காலத்தைவிட விமானக் கட்டணம் 10 மடங்கு அதிகமாக உள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, Indiachinachina

  2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, 2020-ம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. அதன் காரணமாக உலக நாடுகள் அனைத்து முடங்கின. தனித் தனித் தீவுகளாகின. எல்லா நாடுகளும் வெளிநாட்டு விமானப் பயணங்களுக்குத் தடைவிதித்தன.

  கடந்த ஓராண்டு காலமாக கொரோனா வைரஸ் பரவல் குறைந்துள்ளதால் உலக நாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்பிவருகின்றன. சீனாவும் தற்போது கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வெளிநாட்டு விமானப் போக்குவரத்துக்கு அனுமதியளித்துள்ளது. ஆனால், விமானப் பயணக் கட்டணம் பல மடங்கு அதிகமாக உள்ளது. கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு முன்பு இருந்த கட்டணத்தைவிட தற்போது 10 மடங்கு வரை அதிகமாக கட்டணம் உள்ளது.

  ஊழியர்கள் ஊதிய உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, சர்வதேச பயணங்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு போன்றவற்றின் காரணமாக விலை உயர்ந்துள்ளது. உலக அளவில் விமானப் போக்குவரத்துக்கான கட்டணம் அதிகரித்துள்ளது. ஆனால், சீனாவைப் பொறுத்தவரை அங்கு பின்பற்றப்படும் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாகவும் விமானப் போக்குவரத்து கட்டணம் அதிகமாக உள்ளது.

  கட்டுப்பாடுகளின் காரணமாக விமானம் இயக்கப்படுதலின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. சான்ப்ரான்ஸிஸ்கோ முதல் ஷாஷாங்கி வரையில் தென்கொரியாவில் ஒருமுறை நின்று செல்லும் விமானக் கட்டணம் 4,000 அமெரிக்க டாலராக உள்ளது. இந்தக் கட்டணம் தனிமைப்படுத்தலுக்கான ஹோட்டல் கட்டணத்தை உள்ளடக்கவில்லை.

  அந்த கட்டணத்தையும் சேர்த்தால் கூடுதல் செலவாகும். சீனாவுக்கு வெளியே விமானக் கட்டணங்கள் குறைவாக உள்ளபோது, சீனாவில் விமானக் கட்டணம் மிக அதிகமாக உள்ளது.

  2019-ம் ஆண்டு சான்ப்ரான்ஸிஸ்கோவிலிருந்து சீனாவுக்கு செல்லும் கட்டணத்தைவிட தற்போதுள்ள கட்டணம் 10 மடங்கு அதிகம். சிகாகோவிலிருந்து சீனா செல்லும் கட்டணம் முன்பைவிட 6 மடங்கு அதிகமாகவுள்ளது. சீனாவிலிருக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக விமான நிறுவனங்கள் தங்களது பயணத்தை நிறுத்தியுள்ளன. கட்டண உயர்வுக்கு முக்கிய காரணமாக அது பார்க்கப்படுகிறது.

  Published by:Archana R
  First published:

  Tags: China