சீனாவில் பரவும் புதிய வகையான பன்றிக் காய்ச்சல் - ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகையான பன்றிக் காய்ச்சல் உலகெங்கும் பரவக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

சீனாவில் பரவும் புதிய வகையான பன்றிக் காய்ச்சல் - ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை
சீனாவில் பரவும் புதிய வகையான பன்றிக் காய்ச்சல் உலகெங்கும் பரவக்கூடும்
  • Share this:
2009 ஆம் ஆண்டில் பரவிய H1N1 காய்ச்சலின் மரபணுவைக் கொண்ட இந்த புதிய பன்றிக் காய்ச்சலுக்கு G4 என்று பெயரிடப்பட்டுள்ளது. 2011 -ம் ஆண்டு முதல் 2018 -ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட 30,000 சோதனைகளின் மூலம் ஜி4 மனிதர்களுக்குத் தொற்றக் கூடும் என்று சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

பன்றிப் பண்ணைகள் உள்ளிட்ட இடங்களில் வேலை செய்வோரில் 10.4 சதவீதம் பேருக்கு ஏற்கனவே இதன் பாதிப்பு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள், மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு ஜி4 பரவும் என்பதற்கான ஆதாரம் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
மக்கள் தொகையில் 4.4 சதவீதம் பேருக்கு ஜி4 பரவி இருக்கலாம் என்று கணித்துள்ள ஆராய்ச்சியாளர்கள் பன்றிப் பண்ணைகள் உள்ளிட்ட இடங்களில் வேலை செய்வோரை கண்காணிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.

 
First published: June 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading