Home /News /international /

படிக்க இவ்வளோ ஆர்வமா..வகுப்புக்கு சரியான நேரத்திற்கு செல்ல 186 கிமீ வேகத்தில் கார் ஓட்டிய மாணவர்

படிக்க இவ்வளோ ஆர்வமா..வகுப்புக்கு சரியான நேரத்திற்கு செல்ல 186 கிமீ வேகத்தில் கார் ஓட்டிய மாணவர்

186 கிமீ வேகத்தில் கார் ஓட்டிய மாணவர்

186 கிமீ வேகத்தில் கார் ஓட்டிய மாணவர்

மாணவர் மீது வழக்கப் பதிவான நிலையில் அந்த மாணவனுக்கு அபராதம் மட்டும் விதிக்கப்படுமா அல்லது லைசென்ஸ் ரத்து செய்யப்படுமா என்று நீதிமன்றத்தில் தான் முடிவு செய்யப்படும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inter, IndiaFloridaFloridaFlorida
    அமெரிக்காவில் கல்லூரி மாணவர் ஒருவர் வகுப்புக்கு சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும் என 186 கிமீ வேகத்தில் கார் ஓட்டி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

    அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள பெம்ப்ரோக் பைன்ஸ் என்ற பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவர் ஜோசப் டி ஆன்ட்ரே மெல்ஹாதோ. 20 வயதான ஜோசப் ப்ளோரிடா பல்கலைகழக்தில் பயின்று வருகிறார். இவர் ப்ளோரிடாவில் உள்ள நெடுஞ்சாலையில் தனது காரில் மணிக்கு 116 மைல் அதாவது 186 கிமீ வேகத்தில் பயணித்து காவல்துறையிடம் சிக்கியுள்ளார்.

    மூன்று லேன் கொண்ட நெடுஞ்சாலையில் இத்தனை வேகமாக விதிமுறைகளை மீற பறந்து சென்ற ஜோசபை போக்குவரத்து காவலர் பிடித்துள்ளார். காவலர் ஜோசப்பிடம் ஆத்திரத்துடன்,  ‘பொறுப்பில்லாத இளைஞனே யாரையாவது கொலை செய்ய வேண்டும் என்ற வேகத்தில் இப்படி பறந்துகொண்டு செல்கிறாயா. ஏன் இப்படி முட்டாள்தனமாக கார் ஓட்டி செல்கிறாய் ‘ எனக் கேட்டுள்ளார். இதற்கு மாணவன் ஜோசப் கூறிய காரணம் தான் காவலருக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அன்றைய தினம் தான் செமஸ்டரின் முதல் நாள் வகுப்பு. ஆனால் வீட்டில் கிளம்ப தாமதம் ஆகி விட்டது.

    மேலும்  வளர்ப்பு பூனையை வேறு வீட்டில் விட்டுவிட்டு தான் பல்கலைக்கழகத்திற்கு செல்ல வேண்டும். வகுப்புக்கு சரியான நேரத்தில் செல்ல வேண்டும் லேட் ஆகக் கூடாது என்ற நோக்கில் தான் 186 கிமீ வேகத்தில் பயணித்தேன் என்றுள்ளான். மேலும், தனது செயலுக்கு மாணவர் மன்னிப்பும் கேட்டுள்ளார்.

    இதையும் படிங்க: வளர்த்தவரை அடித்துக் கொன்ற கங்காரூ..ஆஸ்திரேலியாவில் அதிர்ச்சி சம்பவம்

    இந்நிலையில் ஓவர் ஸ்பீட்டில் கார் ஓட்டிய மாணவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் அந்த மாணவனுக்கு அபராதம் மட்டும் விதிக்கப்படுமா அல்லது லைசென்ஸ் ரத்து செய்யப்படுமா என்று முடிவு செய்யப்படும். இத்தனை களேபரத்துக்கு இடையே அந்த மாணவன் செல்லவிருந்த வகுப்பானது நடைபெறாமல் கேன்சல் ஆகியுள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Car, College student, Florida, Over speed

    அடுத்த செய்தி