வளர்ப்புப் பறவையால் கொல்லப்பட்ட முதலாளி!

உலகின் மிகவும் ஆபத்தான பறவையாகக் கருதப்படும் காஸோவாரிக்கு பறக்கும் திறன் கிடையாது.

வளர்ப்புப் பறவையால் கொல்லப்பட்ட முதலாளி!
காஸோவாரி
  • News18
  • Last Updated: April 15, 2019, 6:57 PM IST
  • Share this:
உலகின் மிகவும் ஆபத்தான பறவை என்று அறியப்படும் ‘காஸோவாரி’ என்ற பறவையை வளர்த்து வந்தவருக்கு அப்பறவையாலே மரணம் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் மார்வின் ஹேஜோஸ். 75 வயதான ஹேஜோஸ் தனது வீட்டிலேயே காஸோவாரி என்ற பறவையை வளர்த்து வந்துள்ளார். ஈமு கோழி போன்றதொரு தோற்றத்தைக் கொண்டதுதான் இந்தப் பறவை.

உலகின் மிகவும் ஆபத்தான பறவையாகக் கருதப்படும் காஸோவாரிக்கு பறக்கும் திறன் கிடையாது. மேலும், மனிதர்கள் மீது ஒவ்வாமை கொண்ட பறவையாகவே அறியப்படும் காஸோவாரியை வீட்டில் வளர்ப்பதற்கு பல வரன்முறைகள் இருக்கின்றன.


இதைப் பின்பற்றியே காஸோவாரியை வளர்த்து வந்துள்ளார் ஹேஜோஸ். ஆனால், தனது வீட்டின் பின்புறத்தில் பறவை வளர்ந்து வரும் இடத்தில் தெரியாமல் தவறி விழுந்துள்ளார் ஹேஜோஸ்.

இதனால், பயந்த பறவை தனது தற்காப்புக்காக ஹேஜோஸை தாக்கியுள்ளது. தாக்குதலில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது முற்றிலும் விபத்து என்பதால் இதுபோன்ற பறவைகள் வளர்ப்போர் தகுந்த விதிமுறைகளைத் தெரிந்துகொண்டு செயல்படுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் பார்க்க: சீமானுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்த ராகவா லாரன்ஸ்... என்ன பிரச்னை...?
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்