புளோரிடா மாகாணத்தில் மயாமி கடற்கரை ஓரத்தில் இருந்த கட்டடத்தின் ஒரு பகுதி எதிர்பாராதவிதமாக சீட்டு கட்டு போல் சரிந்து விழுந்தது. நள்ளிரவில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிக்கியதால் மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இடிபாடுகளில் சிக்கிய 50 க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 4 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும் படிக்க... நீரிழிவு நோயாளிகளுக்கான ‘சுகர்ஃபிரீ’ மாம்பழம்: பாகிஸ்தானில் அறிமுகம்!
மேலும், கட்டட இடிபாடுகளில் சிக்கிய 159 பேரின் நிலைமை என்ன என்பது குறித்து தெரியவில்லை. தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கட்டட விபத்து குறித்து புளோரிடா ஆளுநருடன் அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் கேட்டறிந்தார். அப்போது விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அதிபர் இரங்கல் தெரிவித்தார். மேலும், மீட்பு பணிகளுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: America, Building collapse