அமெரிக்காவை தாக்கவுள்ள ஃபுளோரன்ஸ் புயல்: 'ரெட் அலர்ட்' கொடுத்துள்ள வானிலை ஆய்வு மையம்

news18
Updated: September 14, 2018, 9:36 AM IST
அமெரிக்காவை தாக்கவுள்ள ஃபுளோரன்ஸ் புயல்: 'ரெட் அலர்ட்' கொடுத்துள்ள வானிலை ஆய்வு மையம்
கோப்புப் படம்
news18
Updated: September 14, 2018, 9:36 AM IST
ஃபுளோரன்ஸ் புயல் இன்னும் 40 மணிநேரத்தில் அமெரிக்காவை தாக்கும் என வானியல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் தற்போது மழை காலம் தொடங்கி உள்ளது. அங்கு அடிக்கடி புயல் உருவாகி கிழக்கு பகுதி மற்றும் வடக்கு பகுதியை புயல் தாக்குவது உண்டு. தற்போது அட்லாண்டிக் கடல் பகுதியில் புதிய புயல்சின்னம் ஒன்று உருவாகியுள்ளது. அதற்கு ஃபுளோரன்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. புயல் வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, வெர்ஜினியா ஆகிய மாநிலங்களை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் கடலோரத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள 17 லட்சம் மக்கள் அவரசர அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அமெரிக்காவில் மையம் கொண்டு உள்ள 'புளோரன்ஸ்' புயல், மேற்கு திசை நோக்கி நகர்ந்து  வடக்கு அல்லது தெற்கு கரோலினாவை தாக்கும் என தகவல்கள் கூறுகின்றன. இந்த புயல் மிகவும் ஆபத்தானது என கணிக்கப்பட்டு உள்ளது. நூறு முதல் 150 செட்டிமீட்டர் அங்குலம் அளவுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தப் புயல் பற்றி டுவிட்டரில் எச்சரிக்கை விடுத்திருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பல வருடங்கள் கழித்து கிழக்குப் பகுதியை மோசமான புயல் தாக்க இருக்கிறது. அதனால்  பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுங்கள் என்று கூறியுள்ளார். மேலும் முன்னெச்சரிக்கையாக தெற்கு கரோலினாவில் உள்ள சிறை ஒன்றில் இருந்து சுமார் ஆயரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
Loading...
First published: September 14, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்