Home /News /international /

பள்ளிகள் மூடல், விமானங்கள் ரத்து... கொரோனா தொற்று அதிகரிப்பால் சீனா உத்தரவு

பள்ளிகள் மூடல், விமானங்கள் ரத்து... கொரோனா தொற்று அதிகரிப்பால் சீனா உத்தரவு

சீனா

சீனா

சீனாவில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் பள்ளிகளை மூடவும், விமானங்களை ரத்து செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று வேகமாக குறைந்து வருகிறது. சீனாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா வைரஸ் மீண்டும் அதிகம் பரவ தொடங்கியுள்ளதால் அண்டை நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் வடக்கும் மற்றும் வடமேற்கு மாகணங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

    சீனாவில் நிலக்கரி தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால் நாடு முழுவதும் மின்தடை அதிகரித்துள்ளது. இதனால் நிலக்கரி இறக்குமதிக்காக மங்கோலியாவில் இருந்து வந்தவர்கள் மூலம் சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக கூறப்படுகிறது.

    சீனாவில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. கொரோனா அதிகம் பரவியுள்ள லான்சோ நகரில் இருந்து பிற மாகணங்களுக்கு செல்ல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டும் பிற மாகணங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்து.

    Also Read : கொரோனா : ரஷ்யாவில் ஒருவாரம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவிப்பு

    லான்சோ மற்றும் ஜியோன் ஆகிய பகுதிகளில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா தலங்களை உடனடியாக மூடவும் சீனா அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாவது அலை குறைந்து வரும் நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Published by:Vijay R
    First published:

    Tags: CoronaVirus

    அடுத்த செய்தி