ஹோம் /நியூஸ் /உலகம் /

ஷின்சோ அபே பாதுகாப்பில் குறைபாடு இருந்ததை மறுக்க முடியாது - ஜப்பான் போலீஸ் ஒப்புதல்

ஷின்சோ அபே பாதுகாப்பில் குறைபாடு இருந்ததை மறுக்க முடியாது - ஜப்பான் போலீஸ் ஒப்புதல்

துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை பிடித்த பாதுகாப்பு அதிகாரிகள்

துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை பிடித்த பாதுகாப்பு அதிகாரிகள்

தனது 27 ஆண்டு கால பணியில் இந்த சம்பவம் போல மிக வருந்தத்தக்க துயரமான சம்பவம் இதுவரை நிகழந்ததில்லை என காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே படுகொலை செய்யப்பட்டது உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டின் நாரா என்ற நகரில் ஷின்சோ அபே நேற்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த போது சுட்டு படுகொலை செய்யப்பட்டார். அவர் மீது 41 வயது மதிக்கத்தக்க நபர் துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில் அவர் கைதாகியுள்ளார். அவர் சுட்ட முதல் புல்லட் அபே மீது பாயாத நிலையில், பாதுகாப்பு அதிகாரிகள் சுதாரிக்க சில நொடிகள் தாமதமான நிலையில் இரண்டாவது குண்டு சுடப்பட்டு அது அபே மீது பாய்ந்தது.

67 வயதான ஷின்சோ அபே, ஜப்பானின் பிரதமராக நீண்ட காலம் இருந்தவர் என்ற பெருமையை கொண்டவர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நபரின் பாதுகாப்பு எவ்வாறு முறியடிக்கப்பட்டு இந்த கோர சம்பவம் நிகழ்ந்தது என்ற கேள்வி பலரின் முன்னர் எழுந்துள்ள நிலையில், இதற்கு அந்நாட்டின் காவல்துறை தலைவர் டோமோயாகி ஒனிசுகா பதில் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய காவல்துறை தலைவர், "முன்னாள் பிரதமர் அபேவின் பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டது என்ற கருத்தில் மாறுபட்ட பேசவில்லை.

அவரது பாதுகாப்பு வீரர்களிடம் குறை இருந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் என்பதால் தீவிரமான விசாரணையை மேற்கொண்டு வருகிறோம். முழுமையான விசாரணைக்குப் பின்னர் உண்மை வெளியே வரும். இந்த பிராந்தியத்தின் தலைமை காவலராக இங்குள்ள பாதுகாப்பு விவகாரங்களுக்கு நானே பொறுப்பு. 1995ஆம் ஆண்டில் காவல் பணியில் சேர்ந்த நான் 27 ஆண்டு காலம் பணியாற்றி வருகிறேன். இந்த சம்பவம் போல மிக வருந்தத்தக்க துயரமான சம்பவம் இதுவரை என் வாழ்நாளில் நிகழ்ந்ததில்லை" என்றார்.

2006ஆம் ஆண்டில் ஜப்பானின் பிரதமராக பொறுப்பேற்ற அபே, 2020ஆம் ஆண்டில் உடல் நலக்குறைவை காரணம் காட்டி பிரதமர் பதவியில் இருந்து விலகினார். ஜப்பான் நாட்டின் பிரதமராக நீண்ட காலம் பதவியில் இருந்த இவர் அந்நாட்டை கட்டமைத்த முன்னணி தலைவர்களில் ஒருவராக கருதப்படுகிறது.

இதையும் படிங்க: இலங்கையில் அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்கரர்கள் - அதிபர் கோத்தபயா தப்பியோட்டம்

அத்துடன், இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்திற்குக் கடிவாளம் போடும் விதமாக இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான குவாட் கூட்டமைப்பு உருவாக முக்கிய காரணியாக விளங்கியவர் ஷின்சோ அபே. ஷின்சோ அபேவின் மறைவுக்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளன.

First published:

Tags: Japan, Shinzo Abe