ஹோம் /நியூஸ் /உலகம் /

அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவம் - காவலர் உட்பட 5 பேர் கொலை!

அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவம் - காவலர் உட்பட 5 பேர் கொலை!

அமெரிக்க துப்பாக்கி சூடு

அமெரிக்க துப்பாக்கி சூடு

அமெரிக்காவின் வட கரோலினா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காவலர் உட்பட 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • interna, IndiaNorth CarolinaNorth Carolina

அமெரிக்காவின் வட கரோலினாவின் தலைநகர் ராலெயிவில் வியாழன் அன்று திடீரென்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் காயம் அடைந்துள்ளனர். மேலும் அதில் 5 பேர் இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கரோலினா மேயர் மேரி-ஆன் பால்ட்வின் தெரிவிக்கையில், நீயூஸ் நதிக் கரை புல்வெளியில் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை காவல்துறை கைது செய்துள்ளது என்று கூறியுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஒரு காவரும் இறந்துள்ளார்.

Also Read : இனவெறி கொடூரம்.. ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு 11 முறை கத்தி குத்து..உயிருக்கு போராட்டம்

அமெரிக்காவில், காரணமே இல்லாமல் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தினால் பரிதாபமாகப் பலர் இறந்து வருகின்றனர். அமெரிக்காவில் 2022ம் ஆண்டில் மட்டும் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தினால் சுமார் 34,000 பேர் இறந்துள்ளனர் என்று கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கி கலாச்சாரத்தைக் குறைப்பதன் மூலம் அதிகரிக்கும் பலி எண்ணிக்கைகளைக் குறைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2017ம் ஆண்டின் படி சுமார் 400 மில்லியன் துப்பாக்கிகள் அமெரிக்க குடிமக்கள் மத்தியில் புழக்கத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: America, Gun shoot