தென் ஆப்ரிக்க தேவாலயத்தில் தாக்குதல்: 5 பேர் உயிரிழப்பு.. 40 பேர் கைது..

தென் ஆஃப்ரிக்காவில் தேவாலயத்தில் நடைபெற்ற தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

தென் ஆப்ரிக்க தேவாலயத்தில் தாக்குதல்: 5 பேர் உயிரிழப்பு.. 40 பேர் கைது..
தென் ஆஃப்ரிக்க தேவாலயத்தில் தாக்குதல்
  • Share this:
தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள சர்வதேச பெந்தகொஸ்தே புனித தேவாலயத்தை தாக்கிய கும்பல் அங்கிருந்தவர்களை பணயக் கைதிகளாக சிறைப்பிடித்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தாக்குதல் நடத்திய 40 பேரைக் கைது செய்து சிறைப்பிடிக்கப்பட்டவர்களை விடுவித்தனர்.

தென் ஆஃப்ரிக்காவின் பெரிய தேவாலயமாகவும் பொருளாதார பலம் கொண்டதாகவும் கூறப்படும் இந்த தேவாலயத்தின் தலைமைப் பொறுப்பிற்கு இரு பிரிவினரிடையே கடந்த சில ஆண்டுகளாக மோதல் நடைபெற்று வந்தது. தேவாலய கணக்கில் இருந்து 48 கோடி ரூபாய் காணாமல் போனதாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்ட நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டும் இதே போன்ற ஒரு மோதல் நிகழ்ந்தது.

மேலும் படிக்க...


முதன்முதலாக முகக்கவசம் அணிந்து பொதுவெளியில் தோன்றிய டிரம்ப்..

தற்போதைய மோதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளவர்களில் காவல் துறையினரும் இருப்பதாகக் கூறும் போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
First published: July 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading