சுற்றுலா பயணிகளை ஈர்க்க கடலுக்கு அடியில் அமைந்துள்ள அருங்காட்சியகம் மீண்டும் திறப்பு.. எங்கு தெரியுமா?

சுற்றுலா பயணிகளை ஈர்க்க கடலுக்கு அடியில் அமைந்துள்ள அருங்காட்சியகம் மீண்டும் திறப்பு.. எங்கு தெரியுமா?

கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளதை தொடர்ந்து ஸ்கூபா டைவர்ஸை ஈர்க்கும் வகையில் கிரேக்க தீவான அலோனிசோஸின் கரையோரத்தில் ஏஜியன் கடல?

 • Share this:
  கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில் இருந்து மீண்டு வந்து சில உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. தொற்று காரணமாக பல நாடுகளின் பொருளாதாரம் சரிந்த நிலையில் மீண்டும் பழைய நிலைக்கு தங்கள் நாட்டின் பொருளாதரத்தை மேம்படுத்தும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. சுற்றுலாவை பெரிதும் சார்ந்திருக்கும் நாடுகள் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வேலைகளில் மீண்டும் ஈடுபட துவங்கி உள்ளன.

  அந்த வகையில் கிரீஸ் நாடு தனது சுற்றுலாத்துறையை மீண்டும் திறந்துள்ளது. கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளதை தொடர்ந்து ஸ்கூபா டைவர்ஸை ஈர்க்கும் வகையில் கிரேக்க தீவான அலோனிசோஸின் கரையோரத்தில் ஏஜியன் கடலில் நீருக்கடியில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தை கிரீஸ் மீண்டும் திறந்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கடலில் நீருக்கடியில் அமைந்திருக்கும் இந்த அருங்காட்சியகத்தில் இருக்கும் சுமார் 2,500 ஆண்டு பழமைவாய்ந்த மதுப்பானைகள், 5-ஆம் நூற்றாண்டில் ஒரு பண்டைய கப்பல் விபத்துக்குள்ளான இடத்தை குறிக்கிறது.

  கடலுக்கடியில் திறக்கப்பட்டுள்ள கிரீஸின் முதல் அன்டர் வாட்டர் மியூசியம் இதுவாகும். நீருக்கடியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த மியூசியத்தை பார்வையிட வந்த ஸ்கூபா டைவர்ஸ் சிலர் கூறுகையில், இது டைவிங் மற்றும் தொல்பொருள் டைவிங் ஆகிய இரண்டின் கலவை. எனவே இந்த டைவிங் எங்களுக்கு சிறப்பு மற்றும் தனித்துவமானது என உற்சாகம் தெரிவித்தனர். இந்த அருங்காட்சியகம் கடந்த 2020-ஆம் ஆண்டில் அலோனிஸ்ஸோஸ் தீவில் இருந்து ஒரு பாறைகள் நிறைந்த பெரிஸ்டெரா என்ற தீவுக்கு அப்பால் கடலுக்கு அடியில் திறக்கப்பட்டது.

  Also read:  உளவு கருவிகள் உள்ளதால்தான் மக்கள் நிம்மதியாக உறங்க, சுதந்திரமாக நடமாட முடிகிறது; பெகாசஸ் தயாரிப்பு நிறுவனம்

  எனினும் கோவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக இந்த சுற்றுலா தளத்திற்கான பார்வையாளர்கள் வருகை மந்தமாகவே காணப்பட்டது. கடும் தொற்று பரவல் வெகுவாக குறைந்துள்ளதை அடுத்து தனது சுற்றுலாத் துறையை கிரீஸ் மீண்டும் திறந்துள்ள இந்த நேரத்தில் இந்த அன்டர் வாட்டர் மியூசியத்திற்கு ஸ்கூபா டைவர்ஸின் வருகை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. ஒரு வழக்கமான பொழுது போக்கு ஸ்கூபா பயணத்தின் விலையை விட 50 சதவீதம் அதிகமாக இந்த அன்டர் வாட்டர் மியூசியத்தை பார்வையிட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

  ஒரு முறைக்கு சுமார் 110 டாலர் கட்டணம் செலுத்த வேண்டும். இதுவரை சுமார்300-க்கும் மேற்பட்ட கைதேர்ந்த ஸ்கூபா டைவர்ஸ் கடலுக்கடியில் இருக்கும் இந்த அருங்காட்சியகத்திற்கு சென்றுள்ளனர். கடலுக்கடியில் அதிக ஆழத்தில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருப்பதால் அனைவராலும் இதை பார்வையிட முடியாது.

  ஏனென்றால் அவ்வளவு ஆழத்திற்குச் செல்வது சிரமம் என்பதே இதற்கு காரணம். எனவே தேர்ச்சி பெற்ற ஸ்கூபா டைவர்ஸ்களுக்கு மட்டுமே அன்டர் வாட்டர் மியூசியத்தை நேரில் சென்று பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஃபெர்ச்சர் மற்றும் Danish wine-cellar தயாரிப்பாளரான லிசெட் ஃபிரடெலண்ட் போன்ற டைவர்ஸ் இந்த அருங்காட்சியகத்தை ஸ்கூபா டைவிங் செய்து பார்வையிட்டனர்.

  தன் அனுபவம் பற்றி கூறிய ஃபிரடெலண்ட், ஆச்சரியமான ஒரு டைவாக இது எனக்கு இருந்தது. நாங்கள் நீருக்கடியில் மியூசியத்தில் அங்கே இருந்த போது, ​​மதுவை ஏற்றிச் செல்லும் ஒரு கப்பலில் இருப்பது எப்படி என்று கற்பனை செய்ய முயன்றேன்" என்று குறிப்பிட்டார்.

  ஆண்டு முழுவதும் மக்களை ஈர்க்கும் ஒரு வகை சுற்றுலா என்று குறிப்பிட்டுள்ள கிரீஸ் அதிகாரிகள், இது சிறப்பு பார்வையாளர்களை டைவ் செய்வதற்கு தாராளமாக அனுமதிக்கிறது என்று தெரிவித்து உள்ளனர்.
  Published by:Esakki Raja
  First published: