Home /News /international /

ஒரே நாளில் 2 ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா.. மீண்டும் பதற்றத்தில் கொரிய தீபகற்பம்

ஒரே நாளில் 2 ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா.. மீண்டும் பதற்றத்தில் கொரிய தீபகற்பம்

இரண்டு ஏரவுகணை சோதனை செய்த வடகொரியா

இரண்டு ஏரவுகணை சோதனை செய்த வடகொரியா

வடகொரியாவின் இந்த சீண்டலுக்கு தென்கொரியா மற்றும் அமெரிக்கா கடும் எதிர்வினையாற்றியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கிழக்காசிய நாடான வட கொரியா மீண்டும் தனது ஏவுகணை சோதனைகளைத் தொடங்கி உலக நாடுகள் மத்தியில் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது. வடகொரிய தலைநகர் பியாங்யாங்கிற்கின் தெற்கே உள்ள பிராந்தியமான ஓங்சோன் என்ற பகுதியில் இருந்து வட கொரியா இரண்டு ஏவுகணைகள் ஏவி அந்நாடு சோதனை செய்துள்ளது. இதை தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகம் திட்டவட்டமாக உறுதி செய்துள்ளது.

    வடகொரியாவின் இந்த சீண்டலுக்கு தென்கொரியா மற்றும் அமெரிக்கா கடும் எதிர்வினையாற்றியுள்ளது. இரு நாட்டு ராணுவமும் தயார் நிலையில் இருந்து, அடுத்த வாரத்தில் கூட்டு ராணுவ ஒத்திகை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

    வடகொரியா தென்கொரியா ஆகிய நாடுகள் மத்தியில் நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா உதவி செய்து வரும் நிலையில் இரு நாடுகளுக்கும் சவால் கொடுத்து அச்சுறுத்தும் விதமாக தென்கொரிய கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணை உள்ளிட்ட ஏவுகணைகளை சோதித்து வருகிறது. வடகொரியாவின் செயல்பாடுகளை கண்டிக்கும் விதமாக அந்நாட்டின் மீது கடும் பொருளாதாரத் தடைகள் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சுமத்திவந்தன.

    இந்நிலையில் அன்மை காலமாக வடகொரிய தனது ஏவுகணை சோதனைகளை குறைத்துள்ளது. 2020 நான்கு சோதனை, 2021இல் எட்டு சோதனை என தனது எண்ணிக்கையை வடகொரிய குறைத்துள்ளது. இந்தாண்டு ஜனவரி முதல் நேற்று வரை எந்தவொரு சோதனையும் வடகொரியா மேற்கொள்ளவில்லை. எனவே, ஐநா சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் வட கொரியா மீது எந்த தடையும் இந்தாண்டு விதிக்கவில்லை. கொரோனா பரவல் அதன் தாக்கம் காரணமாகவே வடகொரிய தனது சோதனை குறைத்து அடக்கி வாசிப்பதாக பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: ஆப்கான் மசூதியில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு.. மூத்த இமாம் உள்பட 20க்கும் மேற்பட்டோர் பலி..

    இந்நிலையில், கடந்த வாரம் தனது நாட்டில் கொரோனா பாதிப்பு முற்றாக ஒழிந்துவிட்டதாக வடகொரியா அறிவித்தது.இதைத் தொடர்ந்து சில நாள்களிலேயே வடகொரியா தனது ஏவுகணை சோதனையை மீண்டும் தொடங்கியுள்ளதால் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: North and south korea, North korea

    அடுத்த செய்தி