இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று ஜூன் 10-ம் தேதி நிகழவிருக்கிறது என நாசா தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வை உலகின் சில பகுதிகளில் இருக்கும் மக்களால் மட்டுமே பார்க்க முடியும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்வானது மொத்தம் 3 நிமிடங்கள் 51 வினாடிகள் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நிலவு வரும்போது அது சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. சூரியன் நிலவை மறைக்கும் அந்த நேரத்தில் சூரியன் நெருப்பு வளையம் போன்று காட்சியளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சூரியனை முழுவதுமாக சந்திரனால் மூடப்படாததால் மறைக்கப்பட்ட பகுதிக்கு வெளியே உள்ள பகுதி ஒளிரும் என்பதால் ஒரு வட்டம் அல்லது வளையமாக தோன்றுகிறது. இந்திய நேரப்படி மதியம் 1.42 மணிக்குத் தொடங்கி மாலை 6.41 மணி வரை சூரிய கிரகணம் நிகழும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கனடா, வடக்கு ரஷ்யா மற்றும் கிரீன்லாந்து ஆகிய பகுதிகளில் இருப்பவர்கள் இந்தச் சூரிய கிரகணத்தை முழுமையாகப் பார்க்க முடியும். உலகின் பிற பகுதிகளில் உள்ள மக்கள் சூரியனின் மேற்பரப்பில் ஒரு இருண்ட நிழலை மட்டுமே காண்பார்கள். இது ஒரு பகுதி கிரகணம். அதனால் ‘நெருப்பு வளையத்தை’ பார்க்க இயலாது.
கிழக்கு அமெரிக்கா, வடக்கு அலாஸ்கா, கனடா, கரீபியனின் சில பகுதிகள், ஐரோப்பா, ஆசியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் இந்தச் சூரிய கிரகணத்தைப் பகுதியாகப் பார்க்க முடியும் என நாசா இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.