தொலைந்துபோகும் வளர்ப்புப் பிராணிகளைக் கண்டுபிடிக்க ‘பெட் டிடெக்டிவ்’..!

சுமார் 7 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பணியைச் செய்து வரும் சன் ஜின்ராங், ஒரு தேடுதல் பணிக்கு 8,00 யுவான் கட்டணத் தொகையாகப் பெறுகிறார்.

தொலைந்துபோகும் வளர்ப்புப் பிராணிகளைக் கண்டுபிடிக்க ‘பெட் டிடெக்டிவ்’..!
செல்லப்பிராணிகள்
  • News18
  • Last Updated: November 18, 2019, 3:20 PM IST
  • Share this:
வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் செல்லப் பிராணிகள் தொலைந்துவிட்டால் அவற்றைக் கண்டுபிடித்து உரியவரிடம் அளிக்கும் பணியை ‘பெட் டிடெக்டிவ்’ என அழைக்கின்றனர்.

சீனாவைச் சேர்ந்த சன் ஜின்ராங் என்பவர் இந்த பெட் டிடெக்டிவ் பணியைச் செய்து வருகிறார். சீனாவின் முதல் பெட் டிடெக்டிவ் என கவுரவிக்கப்பட்டுள்ள சன் ஜின்ராங் இதுவரையில் சுமார் 1000 வளர்ப்புப் பிராணிகள் உரியவர்களிடம் கண்டறிந்து வழங்கியுள்ளார்.

சுமார் 7 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பணியைச் செய்து வரும் சன் ஜின்ராங், ஒரு தேடுதல் பணிக்கு 8,00 யுவான் கட்டணத் தொகையாகப் பெறுகிறார். இந்திய மதிப்பில் சுமார் 80 ஆயிரம் ரூபாய். இதற்காகவே பல அதிநவீன தொழில்நுட்பக் கருவிகள் பயன்படுத்திச் செய்து வருகிறார்.


இதுவரையில் வழங்கப்பட்ட பணிகளில் சுமார் 70 சதவிகிதம் தொலைந்துபோன அல்லது திருடப்பட்ட பிராணிகளைக் கண்டறிந்து கொடுத்துள்ளார் சன்.

மேலும் பார்க்க: வலுப்பெற்ற ஹாங்காங் போராட்டம்...கட்டுப்படுத்த முதன்முறையாக வந்திறங்கிய சீன ராணுவம்..!
First published: November 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்