குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனையை கைது செய்யத் துடிக்கும் ஈரான்!

சர்வதேச குத்துச் சண்டைப் போட்டியில் ஈரானைச் சேர்ந்த பெண் வீராங்கனை வெற்றி பெறுவது இதுதான் முதன்முறையாகும்.

news18
Updated: April 18, 2019, 6:40 PM IST
குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனையை கைது செய்யத் துடிக்கும் ஈரான்!
ஈரான் குத்துச் சண்டை வீராங்கனை
news18
Updated: April 18, 2019, 6:40 PM IST
ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் சாதஃப் காதெம். அவருக்கு வயது 24. அவர், ஈரான் நாட்டின் தலைநகரான தெஹ்ரானில் உடற்பயிற்சி பயிற்சியாளராக இருந்துவருகிறார். மஹயார் மோன்ஷிபௌர் என்பவர் குத்துச்சண்டை பயிற்சியாளர். அவர், பிரான்ஸ் மற்றும் ஈரான் ஆகிய இரண்டு நாடுகளின் குடியுரிமைகளைப் பெற்றவர்.

அவர், ஈரானுக்கு சென்றிருந்த நேரம், சதஃப் காதெமுக்கு குத்துச்சண்டை பயிற்சி அளித்துள்ளார். அந்தப் பயிற்சியின் அடிப்படையில் பிரான்ஸில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டிகளில் சாதஃப் காதெம் கலந்துகொண்டு வெற்றி பெற்றார். சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் ஈரானைச் சேர்ந்த பெண் வீராங்கனை வெற்றி பெறுவது இதுதான் முதன்முறையாகும்.

இந்தநிலையில், சாதஃப் காதெம் மீது ஈரான் அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது. ஈரான் நாட்டு பெண்களுக்கான உடைக் கட்டுப்பாட்டு சட்டத்தை மீறி, சாதஃப் சாட்ஸ் அணிந்து விதியை மீறிவிட்டார் என்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெரிவித்த ஈரான் குத்துச் சண்டை ஆணையம், ‘சாதஃப் காதெம், ஈரான் நாட்டில் பதிவு செய்யப்பட்டவர் கிடையாது. அவர், தனிப்பட்ட முறையில் சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார்’ என்று தெரிவித்துள்ளது. சாதஃப் காதெம், ஈரானுக்கு திரும்பினால், கைது செய்யப்படுவார் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Loading...

Also see:

First published: April 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...