• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • மீண்டும் விமான சேவை: ஆப்கானிஸ்தானில் இருந்து 200 பேர் வெளியேறினர்!

மீண்டும் விமான சேவை: ஆப்கானிஸ்தானில் இருந்து 200 பேர் வெளியேறினர்!

மீண்டும் விமான சேவை

மீண்டும் விமான சேவை

ஆப்கானிஸ்தானில் ஏராளமான வெளிநாட்டினர் சிக்கியுள்ளனர். தங்கள் நாட்டு குடிமக்களை மீட்கும் முயற்சியில்  பல்வேறு நாட்டு அரசுகளும் ஈடுபட்டு வருகின்றன

  • Share this:
    ஆப்கானிஸ்தானில் இருந்து  அமெரிக்கர்கள் உட்பட  200 நபர்கள் வெளியேற தாலிபான் அரசு அனுமதி வழங்கியது.  இதையடுத்து அமெரிக்க படைகள் வெளியேறிய பின்னர் முதன்முறையாக வெளிநாட்டுக்கு விமானம் இயக்கப்பட்டது.

    ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் கைப்பிடிக்குள் வந்ததையடுத்து அங்கிருந்து பலரும் வெளியேறத் தொடங்கினர். ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையம் அமெரிக்க படைகள் வசம் இருந்ததால் இது சாத்தியமானது. இந்நிலையில், அமெரிக்க படைகள் ஆகஸ்ட் 30ம் தேதி முழுமையாக வெளியேறியதை  தொடர்ந்து விமான சேவையும் நிறுத்தப்பட்டது.

    கத்தார் அரசின் உதவியுடன் விமான சேவையை மீண்டும் தொடங்கும் பணியில் தாலிபான் ஈடுபட்டனர். ஆப்கானிஸ்தானில் தற்போது தாலிபான்கள் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது.  அந்நாட்டில் ஏராளமான வெளிநாட்டினர் தற்போதும் சிக்கியுள்ளனர். தங்கள் நாட்டு குடிமக்களை மீட்கும் முயற்சியில்  பல்வேறு நாட்டு அரசுகளும் ஈடுபட்டு வருகின்றன.

    இதையும் படிக்க: ரயில் தண்டவாளத்தில் கார் ஓட்டிய நபர்: வைரலாகும் வீடியோ!


    இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கர்கள் உட்பர் 200 பேர் வெளிநாட்டுக்கு செல்ல தாலிபான் அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து  காபூலில் இருந்து கத்தார் தலைநகர் தோகாவுக்கு விமானம் புறப்பட்டு சென்றது. வருங்காலத்தில் மேலும் சில சர்வதேச விமானங்கள் ஆப்கானிஸ்தானுக்கு இயக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: