Home /News /international /

தலிபான்கள் பெண்களை மிகவும் கொடுமைப்படுத்துவார்கள் - ஆப்கன் முதல் பெண் விமானி எச்சரிக்கை!

தலிபான்கள் பெண்களை மிகவும் கொடுமைப்படுத்துவார்கள் - ஆப்கன் முதல் பெண் விமானி எச்சரிக்கை!

ஆப்கன் முதல் பெண் விமானி

ஆப்கன் முதல் பெண் விமானி

ஆப்கானிஸ்தான் மீண்டும் பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடமாக மாறிவிட்டதாக நிபுணர்களும் ஆர்வலர்களும் தெரிவித்து வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அந்நாட்டு விமானப்படையின் முதல் பெண் விமானியான நிலூஃபர் ரஹ்மானி, பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத சூழல் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். தலிபான்கள் நாட்டை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால், ஆப்கானிஸ்தான் மீண்டும் பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடமாக மாறிவிட்டதாக நிபுணர்களும் ஆர்வலர்களும் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில வாரங்களில் மட்டும், பல உயிரிழப்புகள் மற்றும் வன்முறைகள் குறித்து பல தகவல்கள் வெளியாகி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதற்கிடையில், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். கடந்த மே மாத இறுதி முதல் ஆப்கானில் இருந்து தப்பியோடியவர்களில் 80 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஐக்கிய நாடுகள் அகதிகள் நிறுவனம் கூறியுள்ளது.

Also Read : ஃபேஸ்புக், பயோமெட்ரிக் தொழில்நுட்பங்கள் மூலம் எதிராக செயல்பட்டவர்களை வீடு வீடாகச் சென்று தேடும் தாலிபான்கள்

தலிபான்கள் ஷரியா பற்றி தங்கள் கடுமையான விளக்கத்தை வலுப்படுத்துவார்கள் என்றும், அவர்கள் பெண்களை வேலை செய்ய அனுமதிக்க மாட்டார்கள் மற்றும் பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை தடுப்பார்கள் என்றும் அந்நாட்டு பெண்கள் பயத்துடனும் வேதனையுடனும் இருப்பதாக பலர் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் கடந்த 1996 முதல் 2001 வரை தங்கள் முதல் ஆட்சியின் போது தலிபான்கள் கொடூரமான விதிகளை அமல்படுத்தினர்.

அந்த சமயத்தில் பெண்கள் தங்கள் முகத்தை மறைக்காமல் வெளியே செல்லும் போதும், ஒரு ஆண் உறவினர் உடன் செல்லாமல் தங்கள் வீட்டை விட்டு தனியாக வெளியே வரும்போதும் தலிபான் குழுவின் மத காவல்துறையினரால் பகிரங்கமாக தாக்கப்பட்டனர். தற்போது பெண்களின் உரிமைகளை மதிப்போம் என்று தலிபான்கள் குழு கூறியிருந்தாலும், ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திரங்கள் தலிபான்களால் நிச்சயமாக பறிக்கப்படும் சில அறிஞர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Also Read : தாலிபான்களின் நண்பர்களான ஹக்கானி தீவிரவாதிகள் - இந்த கொலைகார அமைப்பின் பின்னணி என்ன?

முன்னதாக, தலிபான் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் கூறியிருந்ததாவது, அவர்கள் கைப்பற்றிய பகுதிகளில் பெண்கள் மற்றும் சிறுமிகள் கல்வியைத் தொடர அனுமதிப்பதாகக் தெரிவித்தார். ஆனால் கடந்த வார இறுதியில் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய முயன்ற பெண்களை தலிபான் போராளிகள் திருப்பிவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வெளியான ஹெராத்தின் அறிக்கைகள் குறித்து ஷாஹீனிடம் கேட்ட போது, இத்தகைய நடத்தை தாலிபான் கொள்கையை மீறுவதாகவும், தனிப்பட்ட குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் முதல் பெண் விமானியாக இருந்த ரஹ்மானி, தலிபான்கள் பெண்களை அதிகம் துன்புறுத்துவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்களா என்பதில் மிகவும் சந்தேகம் இருக்கிறது என்றும் ரஹ்மானி கூறியுள்ளார்.

Also Read : தாலிபான்கள் கைக்குள் சிக்காத பஞ்ஷிர் பள்ளத்தாக்கு: போருக்கு தயாராகும் வீரர்கள்

ஃபாக்ஸ் நியூஸின் கூற்றுப்படி, 29 வயதான ரஹ்மானி தனது குடும்பம் மற்றும் பெற்றோர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், தலிபான்களால் தாக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, "2001-ல் தலிபான்களின் வீழ்ச்சிக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் விமானப்படையின் முதல் பெண் விமானியாக இருந்ததற்காக அவர் 2015-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவிற்கு தப்பிச் சென்றேன்.

துரதிஷ்டவசமாக, என் குடும்பம் இன்னும் ஆஃப்கானில் இருப்பதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் என்ன நடந்தது என்பதை நான் கேள்விப்பட்டதால், என்னால் தூங்க முடியவில்லை. என் மனதை ஒன்றிணைக்க முடியவில்லை. அவர்களின் பாதுகாப்பிற்காக நான் மிகவும் பயப்படுகிறேன். நிச்சயமாக, அது என்னைப் பற்றியது மட்டுமல்ல. ஒட்டுமொத்த நாட்டை பற்றியது, " என்று நிலூபர் ரஹ்மானி ஃபாக்ஸ் நியூஸிடம் கூறினார்.

எவ்வாறாயினும், நான் விமானியாகவும் ஆப்கானிஸ்தான் பெண்களுக்கான குரலாகவும் இருப்பதில் பெருமைப்படுகிறேன் என்றும் கூறினார். தற்போதைய சூழ்நிலையிலிருந்து ஆப்கானிஸ்தான் பெண்களை யாராவது காப்பாற்றுவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் அசோசியேட்டட் பிரஸ்ஸின் சமீபத்திய அறிக்கையின்படி, தலிபான்கள் இப்போது பெண்களை வேலைக்குத் திரும்பவும், பெண்கள் தங்கள் முகத்தை மறைத்துக்கொண்டு பள்ளிக்குத் திரும்பவும் ஊக்கிவிக்கப்படுகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது. ஆனால் அவர்கள் கைப்பற்றிய அனைத்து மாகாணத்திலும் இது நிகழவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இதுதவிர, தீவிரவாத குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தலிபான் போராளிகளை திருமணம் செய்ய அங்குள்ள குடும்பங்கள் தங்கள் மகள்களை ஒப்படைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் சமீபத்திய நாட்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. ஆனால் தலிபான் செய்தித் தொடர்பாளர் முஜாஹித் இந்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று கூறியுள்ளதாக வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published:

Tags: Afghanistan

அடுத்த செய்தி