இறந்த பெண்ணின் கர்ப்பப்பையிலிருந்து பிறந்த உலகின் முதல் குழந்தை!

இறந்த பெண்ணில் கருப்பையை தானமாகப் பெற்று உலகிலேயே முதல்முறையாக ஒரு குழந்தை பெற்றெடுக்கப்பட்டுள்ளது.

Web Desk | news18
Updated: December 5, 2018, 7:49 PM IST
இறந்த பெண்ணின் கர்ப்பப்பையிலிருந்து பிறந்த உலகின் முதல் குழந்தை!
இறந்த பெண்ணில் கருப்பையை தானமாகப் பெற்று உலகிலேயே முதல்முறையாக ஒரு குழந்தை பெற்றெடுக்கப்பட்டுள்ளது.
Web Desk | news18
Updated: December 5, 2018, 7:49 PM IST
இறந்த பெண் ஒருவரின் கர்ப்பப்பையை தானமாகப் பெற்று பிரேசிலைச் சேர்ந்த பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.

பிரேசிலில் உலகிலேயே முதன்முறையாக இறந்த பெண்ணின் கர்ப்பப்பையிலிருந்து குழந்தை பெற்றெடுக்கப்பட்டிருப்பது பெரிய சாதனை என சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். இதன் மூலம் கர்ப்பம் தரிக்க முடியாத பல பெண்களுக்கும் இறந்தவர்களிடமிருந்து தானமாகப் பெறப்படும் கர்ப்பப்பையை பயன்படுத்த முடியும் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னதாக உலகில் பலரும் இறந்தவர்களின் கருப்பையை தானமாகப் பெற்று குழந்தை பிறப்பு குறித்து சோதித்துள்ளனர். ஆனால், அனைத்திலும் தோல்வியே ஏற்பட்டது. ஆனால், முதன்முறையாக இறந்த பெண் ஒருவரின் கருப்பை மூலம் குழந்தை உயிருடன் மட்டுமல்லாது நல்ல ஆரோக்கியத்துடனும் பிறந்துள்ளது. இதுவே முதல்முறை என சர்வதேச மருத்துவத்துறை ஆச்சர்யத்தில் உள்ளது.

பிரேசிலில் பிறப்பிலேயே கருப்பை இல்லாமல் பிறந்த பெண் ஒருவருக்குத் தான் இறந்த பெண் ஒருவரின் கருப்பையைப் பயன்படுத்தி குழந்தைப்பேறு பெற்றுள்ளனர். கருப்பை தானமாகப் பெற்ற அப்பெண் இயற்கை முறையிலேயே கருத்தரித்து குழந்தைப் பெற்றெடுத்திருப்பது மருத்துவத்துறையில் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

மேலும் பார்க்க: அரசியல் வருகை குறித்து நடிகர் விஷால் பேட்டி!
First published: December 5, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...