பொதுவாக வேலை திறன், நேர்மை, ஒழுக்கம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு நபரை வேலையில் சேர்ப்பதும் வேலையில் இருந்து நீக்குவதையும் நாம் பார்த்திருப்போம். ஆனால், பிரிட்டன் நாட்டில் ஒரு நபரை முதலாளி அவர் தலை வழுக்கையாக இருப்பதாகக் காரணம் காட்டி வேலையில் இருந்து நீக்கியுள்ளார். அந்நாட்டில் உள்ள லீட்ஸ் பகுதியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் டேங்கோ நெட்வொர்க். இதன் முதலாளி பிலிப் ஹெல்கேத் தனது நிறுவனத்தில் பணிபுரியும் சேல்ஸ் டைரக்டரான மார்க் ஜோன்ஸ் என்பவரை வேலையை விட்டு நீக்கிய விதம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. முதலாளி பிலிப் 50 வயதை கடந்த வழுக்கை தலையுடன் கூடிய முதிய வயதுகாரர்.
எனவே, தனது டீம் தன்னை போல முதிய தோற்றத்தில் இல்லாமல் இளமை துள்ளலுடன் இருக்க வேண்டும் என்று காரணம் காட்டி சேல்ஸ் துறையின் அதிகாரியான மார்க் ஜோன்ஸை அவரது தலை வழுக்கையாக இருப்பதாக காரணம் காட்டி வேலையை விட்டு நீக்கியுள்ளார். ஆனால் உன்மையில் மார்க் தலையில் முடி இருக்கிறதாம், வழுக்கை இல்லையாம்.
தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கருதிய ஜோன்ஸ், தன்னை வேலையை விட்டு நீக்க வேண்டுமென்றே இதுபோன்ற அர்த்தமில்லா காரணம் காட்டியுள்ளார் என்ற புகாருடன் நீதிமன்றத்தை நாடியுள்ளார். அலுவலகத்தில் சில்லறை அரசியில் காரணங்களுக்காக இது போன்ற செயலில் முதலாளி ஈடுபட்டுள்ளார்.தனது பணி நீக்கத்தில் எந்த நியாமான அடிப்படையும் இல்லை என ஜோன்ஸ் நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.
இவரது வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜோன்ஸை பணியை விட்டு நீக்கியதில் எந்த அடிப்படை தகுதியும் இல்லை எனக் கூறி ரூ.70 லட்சம் இழப்பீடு வழங்க டேங்கு நெட்வொர்க் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. கடந்தாண்டு பிரிட்டன் நாட்டின் தீர்பாயம் ஊழியரின் வழுக்கை தலையை குறிப்பிட்டு அவமதிப்பது, பெண்களின் மார்பகத்தின் அளவை குறிப்பிடுவதற்கு சமம். இதுவும் பாலியல் தொல்லை என்று கருதப்படும் எனத் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.