கடலுக்கு அடியில் பயங்கரம்.. தண்ணீரில் கொளுந்துவிட்டு எரிந்த தீ - மிரள வைக்கும் வீடியோ காட்சிகள்

மெக்சிகோ தீ விபத்து

மஞ்சள் நிறத்தில் தீ கொளுந்து விட்டு எரிந்துக்கொண்டிருந்தன, எரிமலை வெடிப்புகளில் இருந்து வெளியேறும் லாவாக்கள் போல் தண்ணீரில் தீ கொப்பளித்துக்கொண்டிருந்தது.

 • Share this:
  கடலில் கொளுந்துவிட்டு எரியும் தீ குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

  மெக்சிகோ கடல் பகுதியில் தீ கொளுத்துவிட்டு எரியும் காட்சிகள் இணையத்தில் வெளியான. மூன்று தீயணைப்பு கப்பல்கள் தண்ணீரை பாய்ச்சி அடித்துக்கொண்டிருந்தன. எரிமலைக்குழம்புகள் போன்று முதலில் காட்சியளித்தன. மெக்சிகோ வளைகுடாவில் அமைந்துள்ள அந்நாட்டின் நிறுவனமான பெமெக்ஸ் நிறுவனத்தின் எண்ணெய் வயல் அருகே கடலுக்கடியில் வெடிப்பு ஏற்பட்டது தெரியவந்தது.

     மஞ்சள் நிறத்தில் தீ கொளுந்து விட்டு எரிந்துக்கொண்டிருந்தன, எரிமலை வெடிப்புகளில் இருந்து வெளியேறும் லாவாக்கள் போல் தண்ணீரில் தீ கொப்பளித்துக்கொண்டிருந்தது. கடலுக்கடியில் சென்ற பைப் லைனில் ஏற்பட்ட விரிசல் காரணமாக எரிவாயு கசிந்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 5.15 மணிக்கு இந்த தீ விபத்தானது ஏற்பட்டுள்ளது.

  Also Read: இங்க யாருக்கும் சம்பளம் தரல.. லைவில் போட்டுடைத்த செய்தி வாசிப்பாளர் - ஷாக்கான நேயர்கள்

  மூன்று கப்பல்களின் உதவியைக் கொண்டு தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்றுள்ளது. சுமார் 5 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் 10.30 மணிக்கு இந்த தீவிபத்து சரிசெய்யப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தீ அணைக்கு பணியில் ஈடுபட்டிருந்த போது எடுக்கப்பட்ட காட்சிகள்தான் சமூகவலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீ விபத்து ஊழியர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை என பெமெக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. இதன்காரணமாக உற்பத்தியிலும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அந்நிறுவனத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: