ஹாங்காங்கின் ‘ட்சிம் ஷா ட்சுயி’ பகுதியில், எம்பயர் குழுமத்தின் சார்பில் உணவு விடுதிகள், குடியிருப்புகள் மற்றும் கிளப்கள் அடங்கிய 42 மாடிகள் கொண்ட வணிக வளாகம் பிரமாண்டமாக கட்டப்பட்டு வந்தது.
இந்த கட்டடத்தில் இரவு 11 மணி அளவில் தீவிபத்து ஏற்பட்டது. கட்டிடம் முழுமைக்கும் தீ பரவியதால், கொழுந்துவிட்டு எரிந்து அருகே இருந்த கட்டிடங்களில் இருந்தவர்களை மிரட்டியது. இதனால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் விடுதிகளை விட்டு வெளியேறினர்.
Hongkong fire pic.twitter.com/UBVACdVBrp
— Yiming Zhang (@YimingZhang_) March 2, 2023
தகவலறிந்து 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களுடன் வந்த வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடினர். 2 ஜெட் விமானங்களை பயன்படுத்தி தீயை அணைக்க முயன்றனர். சுமார் 250 தீயனைப்பு வீரர்கள் தீயை அனைக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், இருவர் காயம் அடைந்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Fire accident, Hong Kong