ஹோம் /நியூஸ் /உலகம் /

துபாய் புர்ஜ் கலிபாவில் 35 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து - மீட்பு பணிகள் தீவிரம்!

துபாய் புர்ஜ் கலிபாவில் 35 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து - மீட்பு பணிகள் தீவிரம்!

துபாய் தீ விபத்து

துபாய் தீ விபத்து

எமிரேட்டின் அரசு ஆதரவு டெவலப்பரான எமாரின் 8 பவுல்வர்டு வாக் எனப்படும் கோபுரங்களின் தொடரின் ஒரு பகுதியான இந்த கட்டிடத்தின் மீது தீப்பிடித்த கருமையான சாம்பல் கறைகள் நீண்டு கிடப்பதைக் காணலாம்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • internati, IndiaDubai

  துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபா அருகே உள்ள 35 மாடி கட்டிடத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.

  அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் யாரும் பாதிக்கப்பட்டார்களா காயங்கள் அல்லது உயிரிழப்புகள் ஏதும் நடந்ததா என்பது குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. அனால் தீ பரவத்தொடங்கிய சிறிது நேரத்திலேயே முழுவதுமாக அணைக்கப்பட்டது.

  எமிரேட்டின் அரசு ஆதரவு டெவலப்பரான எமாரின் 8 பவுல்வர்டு வாக் எனப்படும் கோபுரங்களின் தொடரின் ஒரு பகுதியான இந்த கட்டிடத்தின் மீது தீப்பிடித்த கருமையான சாம்பல் கறைகள் நீண்டு கிடப்பதைக் காணலாம்.

  துபாய் போலீஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு துறை தீவிபத்து குறித்து  எமார் நிறுவனமும் எந்த பதிலும் இதுவரை அளிக்கவில்லை. துபாய் மாநகர அலுவலகத்தின் ஊடக தொடர்பு துறையும் பதிலளிக்காமல் மௌனம் காத்து வருகின்றனர்.

  இதையும் படிங்க :நாளை முழு சந்திர கிரகணம்.. தமிழ்நாட்டில் எப்போது தொடங்கும்..? நேரம் வாரியாக முழு விவரம்!

  சமீபத்திய ஆண்டுகளில் வானளாவிய கட்டிடங்கள் நிரம்பிய துபாயில் பல உயரமான கட்டிடங்களில் ஏற்பட்ட தொடர் தீ விபத்துகள், நாட்டில் பயன்படுத்தப்படும் கட்டிட பூச்சு மற்றும் கட்டிடம் கட்ட பயன்படுத்தும் பொருட்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளைத் தொடர்ந்து எழுப்பி வருகிறது.

  2015 ஆம் ஆண்டு, புத்தாண்டு தினத்தன்று துபாய் நகரத்தில் உள்ள தி அட்ரஸ் ஹோட்டலில் 63 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த ஆண்டு ஏப்ரலில், புர்ஜ் கலீஃபாவுக்கு எதிரே உள்ள துபாயின் சொகுசு சுவிஸ் அல் முரூஜ் ஹோட்டலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Dubai, Fire accident