Home /News /international /

கியூபாவில் மின்னல் தாக்கியதில் எண்ணெய் கிடங்கில் தீ விபத்து - 121 பேர் காயம்

கியூபாவில் மின்னல் தாக்கியதில் எண்ணெய் கிடங்கில் தீ விபத்து - 121 பேர் காயம்

கியூபா தீ விபத்து

கியூபா தீ விபத்து

Cuba : தீ விபத்து ஏற்பட்ட எண்ணெய் கிடங்கில் மொத்தம் 8 பெரிய தொட்டில்களில் கச்சா எண்ணெய் இருப்பு வைக்கப்பட்டு இருந்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Cuba , India
    கியூபா நாட்டில் உள்ள மடான்சாஸ் என்னும் பகுதியில் உள்ள எண்ணெய் கிடங்கில் கடந்த வெள்ளிக்கிழமை மின்னல் தாக்கியதில் தீ விபத்து ஏற்பட்டது.

    இதுவரை கிடைத்த தகவலின் படி இந்த விபத்தில்  121 பேர் காயம் அடைத்து உள்ளனர். மேலும் 17 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து நடந்த பகுதிக்குச் சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 1900 பேரைப் பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

    அந்நாட்டின் தீ அணைப்பு மற்றும் மீட்புக் குழு இணைத்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவரத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.  அப்பகுதியின் சுகாதார அதிகாரி, அடையாளம் தெரியாத ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். விபத்தில் காயம் அடைத்தவர்களில் 5 பேர் பலத்த காயத்துடனும் மேலும் 3 பேர் மிகப் பலத்த காயத்துடனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கியூபா அரசு தெரிவித்துள்ளது.

    Also Read : ஆபரேஷன் பிரேகிங் டான் - மீண்டும் தொடங்கியது இஸ்ரேல் - பாலஸ்தீன் மோதல்.. காசா எல்லையில் பதற்றம்

    தீ விபத்து ஏற்பட்டதும் தீயைப் பரவாமல் தடுக்கும் முயற்சியில் 17 வீரர்கள் ஈடுபட்டனர். தற்போது அவர்களிடம் இருந்து எந்தவொரு  தகவலும் கிடைக்காத நிலையில் அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டுவர அந்நாட்டு வீரர்கள் போராடிக்கொண்டு இருக்கையில் கியூபா நட்பு நாடுகளிடம் உதவி கோரியுள்ளது. அதன் படி பிற நாடுகள் கியூபா நாட்டின் எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு உதவி செய்து வருகின்றனர். கியூபா அதிபர் மிகுவல் டயஸ்-கேனல் உதவி செய்த மெக்சிகோ, வெனிசுலா, ரஷ்யா, நிகரகுவா, அர்ஜென்டினா, சிலி ஆகிய நாடுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தொழில்நுட்ப ரீதியாக ஆலோசனை வழங்கிய அமெரிக்காவிற்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.

    Also Read : ஆபரேஷன் பிரேகிங் டான் - மீண்டும் தொடங்கியது இஸ்ரேல் - பாலஸ்தீன் மோதல்.. காசா எல்லையில் பதற்றம்

    தீ விபத்து ஏற்பட்ட எண்ணெய் கிடங்கில் மொத்தம் 8 பெரிய தொட்டில்களில் கச்சா எண்ணெய் வைக்கப்பட்டு இருத்த நிலையில், முதல் தொட்டியில் 26,000 கியூபிக் மீட்டர் அளவு கச்சா எண்ணெய் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தினால் எந்த அளவிற்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற நிலை தெரியவில்லை. கடந்த சில நாட்களாகக் கியூபாவில் எரிபொருள் தட்டுப்பாடு உள்ள நிலையில் இந்த விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தினால் சுற்று வட்டார பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
    Published by:Janvi
    First published:

    Tags: Fire accident

    அடுத்த செய்தி