ஹோம் /நியூஸ் /உலகம் /

கம்போடியா-தாய்லாந்து எல்லை சூதாட்ட ஹோட்டலில் பயங்கர தீவிபத்து... 19 பேர் பலி!

கம்போடியா-தாய்லாந்து எல்லை சூதாட்ட ஹோட்டலில் பயங்கர தீவிபத்து... 19 பேர் பலி!

தீ விபத்து

தீ விபத்து

தாய்லாந்தில் கேசினோக்கள் சட்டவிரோதமானது. ஆனால் எல்லை பகுதிகளில் அண்டை நாடுகளான மியான்மர், கம்போடியா மற்றும் லாவோஸ் ஆகியவை லாபகரமான தொழிலை நடத்துகின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai |

கம்போடியாவில் கேசினோ ஹோட்டலில்  12 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த  தீ விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். சுமார் 50 பேர் காயமடைந்தனர்.

கம்போடியாவில் தாய்லாந்து எல்லையில் உள்ள போய்பெட் நகரில் கேசினோ ஹோட்டலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை 4 மணியளவில் 13, 14 மற்றும் 15வது தளங்களில்  பிடித்த  தீ மளமளவென பரவத் தொடங்கியது. இதனால் அப்பகுதியே புகைமண்டலம் சூழ்ந்தது போல மாறியது.

ஹோட்டலுக்குள் இருந்த பொதுமக்கள் ஜன்னல் வழியாக வெளியே குதித்து உயிர் தப்பினர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் 19 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 12க்கும் மேற்பட்டோர் தீ விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி வருவதாக கூறப்படுகிறது.

தாய்லாந்தில் கேசினோக்கள் சட்டவிரோதமானது. ஆனால் எல்லை பகுதிகளில் அண்டை நாடுகளான மியான்மர், கம்போடியா மற்றும் லாவோஸ் ஆகியவை லாபகரமான தொழிலை நடத்துகின்றன. அப்படியான ஒரு ஹோட்டலில் தான் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

First published: