பின்லாந்தின் ஒரு நாள் பிரதமராக பதவி வகித்த 16 வயது பெண் ஆவா முர்டோ..

பிரதமர் சன்னா மரின் பேசுகையில், தொழில்நுட்பங்கள் அனைவருக்கும் அணுகக்கூடியதாக இருப்பதை உறுதி செய்வதின் முக்கியத்துவத்தை ஆவா முர்டோ வலியுறுத்தினார் என்றார்.

பின்லாந்தின் ஒரு நாள் பிரதமராக பதவி வகித்த 16 வயது பெண் ஆவா முர்டோ..
பிரதமர் சன்னா மரின் - ஆவா முர்டோ
  • Share this:
ஐரோப்பிய நாடான பின்லாந்தில் 34 வயதான சன்னா மரின் பிரதமராக பதவி வகிக்கிறார். இங்கு அவர் ஆண், பெண் பாலின இடைவெளியை முடிவுக்கு கொண்டு வரும் போராட்டத்தை கையில் எடுத்துள்ளார். அந்த வகையில் 16 வயது சிறுமியான ஆவா முர்டோ என்பவரை நேற்று முன்தினம் ‘ஒரு நாள்’ பிரதமர் நாற்காலியில் உட்கார வைத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

ஆவா முர்டோவுக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் வழங்கப்படாதபோதும், அவர் அந்த ஒரு நாளில் தொழில்நுட்பத்தில் பெண்களின் உரிமைகளை முன்னிலைப்படுத்த பல்வேறு அரசியல்வாதிகளை சந்தித்தார். சர்வதேச பெண் குழந்தைகள் தினம், 11-ஆம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, ஆவா முர்டோ ஒரு நாள் பிரதமர் பதவியை வகித்துள்ளார்.


சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, பிளான் இன்டர்நேஷனல் அமைப்பு பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் என்ற திட்டத்தின்கீழ், உலகம் முழுவதும் ஒரு நாள் அரசியல் மற்றும் பிற துறைகளின் தலைமைப்பதவிக்கு பெண் குழந்தைகள் வருவதற்கு அனுமதித்துள்ளது. அந்த வகையில் பின்லாந்தில் 4-வது ஆண்டாக இது பின்பற்றப்பட்டுள்ளது.


இதையொட்டி பிரதமர் சன்னா மரின் பேசுகையில், தொழில்நுட்பங்கள் அனைவருக்கும் அணுகக்கூடியதாக இருப்பதை உறுதி செய்வதின் முக்கியத்துவத்தை ஆவா முர்டோ வலியுறுத்தினார். மேலும், தொழில்நுட்ப வளர்ச்சி நாடுகளுக்கு இடையே அல்லது சமூகங்களுக்கு இடையே டிஜிட்டல் பிளவுகளை ஆழமாக்க காரணமாக இருந்துவிடக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.
First published: October 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading