Home /News /international /

வைரலான டான்ஸ் வீடியோ.. போதைப்பொருள் பயன்படுத்தினாரா பின்லாந்து பிரதமர்? ஆய்வில் தெரியவந்த தகவல்

வைரலான டான்ஸ் வீடியோ.. போதைப்பொருள் பயன்படுத்தினாரா பின்லாந்து பிரதமர்? ஆய்வில் தெரியவந்த தகவல்

சன்னா மரீன்

சன்னா மரீன்

மரீன் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில், தான் சிறு வயதில் கூட போதைப்பொருள் உட்கொண்டதில்லை எனவும் இந்த சோதனைக்கூட தனக்கான சட்டபாதுகாப்பிற்காக எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    பின்லாந்து பிரதமர் சன்னா மரீனுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவர் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்பது உறுதியாகியுள்ளது. 

    கடந்த வாரம் மரின் தனது நண்பர்களுடன் குடித்துவிட்டு டான்ஸ் ஆடியது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது. இதனையடுத்து அந்த பார்ட்டியில் மது மட்டுமின்றி வேறு சில போதைப்பொருட்களும் பயன்படுத்தப்பட்டதாக ஊகங்கள் எழத்தொடங்கின.

    இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி, அந்நாட்டு அரசு நடத்திய சோதனையில் சன்னா மரீன் போதைப் பொருட்கள் எதுவும் உட்கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் எந்த மாதிரியான சோதனைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்த தகவல்களை அரசு வெளியிடவில்லை, மேலும் இந்த சோதனைகளுக்கான செலவை தானே ஏற்பதாக பிரதமர் மரீன் தெரிவித்தார்.

    இது குறித்து அந்நாட்டு அரசு அதிகாரிகள் சிலர் தெரிவித்த தகவல்படி, ஆம்பெட்டமைன்ஸ், பார்பிடுரேட்ஸ், கென்னாபிஸ், கொக்கைன் உள்ளிட்ட போதை பொருட்கள் உட்கொள்ளப்பட்டதா என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

    இதையும் படிங்க: இன்டெர்வியூவில் பெண்ணிடம் வயதை கேட்டதால் ரூ. 3 லட்சம் இழப்பீடு.. டோமினோஸ் நிறுவனத்துக்கு உத்தரவு!

    இது குறித்து மரீன் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில், தான் சிறு வயதில் கூட போதைப்பொருள் உட்கொண்டதில்லை எனவும் இந்த சோதனைக்கூட தனக்கான சட்டபாதுகாப்பிற்காக எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

    தான் குறைவாகவே மது அருந்தியதாகவும், அதிக நேரம் நண்பர்களுடன் டான்ஸ் ஆடியதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் டான்ஸ் ஆடியது ஒரு குற்றமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். 

    இது குறித்து எதிர்கட்சியினர் கூறும்போது, பிரதமர் பார்ட்டியில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதெல்லாம் தவறில்லை, அவரை வீடியோ எடுத்து சங்கடத்திற்கு உள்ளாக்கும் நண்பர்களை அவர் அருகில் வைத்திருப்பது தான் பிரச்னை என கூறுகின்றனர்.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Prime minister, Viral Video

    அடுத்த செய்தி