கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த அதிபருக்கு எதிராகத் திரண்ட மக்கள் செர்பியாவின் பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தலைநகர் பெல்கிரேடில் அமைதியாகத் தொடங்கிய போராட்டம் வன்முறையாக மாறியது. போலீசாரை நோக்கி கற்களையும், பாட்டில்களையும் வீசி எறிந்த போராட்டக்காரர்களை சமாளிக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
அப்போது ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர். ஊரடங்கு அறிவிப்பிலிருந்து அதிபர் பின்வாங்கிய பின்னும் போராட்டங்கள் இரவிலும் தொடர்ந்ததால் செர்பிய நகரங்களில் பதற்றம் நிலவுகிறது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.