காங்கோ நாட்டில் கமிடுகா என்ற இடத்தில் தங்கச்சுரங்கத்தில் பணியாளர்கள் வழக்கமான பணி செய்துகொண்டிருந்தபோது. திடீரென கனமழை பெய்துள்ளது. இதனால் சுரங்கத்தின் வெளியே மண் சரிந்து விபத்து நேரிட்டுள்ளது.
இதில் 50-க்கும் மேற்பட்டோரின் கதி என்ன என்பதே தெரியாத சூழல் நிலவுகிறது. திடீர் வெள்ளமும் அந்த தங்கச் சுரங்கத்தின் அருகே ஏற்பட்டுள்ளதால் உடல்கள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.