ஹோம் /நியூஸ் /உலகம் /

'தேசிய கீதம் பாட மாட்டோம்'.. ஹிஜாப் போராட்டத்திற்கு ஆதரவாக ஈரான் கால்பந்து வீரர்கள் போர்கொடி.. மைதானத்தில் பரபரப்பு..

'தேசிய கீதம் பாட மாட்டோம்'.. ஹிஜாப் போராட்டத்திற்கு ஆதரவாக ஈரான் கால்பந்து வீரர்கள் போர்கொடி.. மைதானத்தில் பரபரப்பு..

ஈரான் கால் பந்தாட்ட வீரர்

ஈரான் கால் பந்தாட்ட வீரர்

ஹிஜாப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், உலகக் கோப்பை கால்பந்து தொடரில், ஈரான் வீரர் தங்களது நாட்டு தேசிய கீதத்தை பாடாமல் புறக்கணித்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • interna, IndiaQatarQatar

  ஹிஜாப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஈரான் கால்பந்து வீரர்கள், அந்நாட்டு தேசிய கீதத்தை பாடாமல் தவிர்த்தனர்.

  ஈரானில் 7 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதனால், மாசா அமினி என்ற இளம் பெண் ஹிஜாப் அணியாததற்காக கைது செய்யப்பட்டார். அத்துடன், அவர் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

  இதனால் ஈரான் அரசுக்கு எதிராக, அந்நாட்டில் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், உலகக் கோப்பை கால்பந்து தொடரில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டி தொடங்குவதற்கு முன்பு, ஈரான் வீரர் தங்களது நாட்டு தேசிய கீதத்தை பாடாமல் புறக்கணித்தனர்.

  ஈரான் கால்பந்தாட்ட வீரர்களின் இந்த துணிகரமான செயலுக்கு சமூகவலைதளங்களில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

  இந்தோனேஷியா நிலநடுக்கம்.. சேதமடைந்த வீடுகள்.. அதிகரிக்கும் உயிரிழப்புகள்! 

  அதே நேரத்தில் மைதானத்தில் இருந்த ஈரான் அணி ரசிகர்கள் இந்த செயலை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சத்தங்கள் எழுப்பினர்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: FIFA 2022, Hijab, Iran