ஹோம் /நியூஸ் /உலகம் /

கால்பந்து போட்டியில் பெல்ஜியம் அணி அதிர்ச்சி தோல்வி.. அடித்து நொறுக்கி கலவரம் செய்த ரசிகர்கள்

கால்பந்து போட்டியில் பெல்ஜியம் அணி அதிர்ச்சி தோல்வி.. அடித்து நொறுக்கி கலவரம் செய்த ரசிகர்கள்

பெல்ஜியமில் கால்பந்து ரசிகர்கள் கலவரம்

பெல்ஜியமில் கால்பந்து ரசிகர்கள் கலவரம்

FIFA World Cup 2022 - சர்வதேச தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள பெல்ஜியம் அணி 22 ஆவது இடத்தில் மொராக்கோ அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • inter, IndiaBrusselsBrussels

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பெல்ஜியம் அணி அதிர்ச்சி தோல்வி அடைந்ததால் அந்நாட்டில் ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். கத்தார் நாட்டில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற குரூப் பிரிவு போட்டியில் பலம் வாய்ந்த பெல்ஜியம் அணி, மொராக்கோ அணியை எதிர்த்து விளையாடியது. சர்வதேச தரவரிசை பட்டியலில் பெல்ஜியம் அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. மொராக்கோ அணியோ 22ஆவது இடத்தில் உள்ளது. எனவே, இந்த போட்டியில் பெல்ஜியம் எளிதாக வெற்றி பெற்று நாக்அவுட் சுற்று முன்னேறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

ஆனால் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே மொராக்கோ அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, பெல்ஜியம் அணிக்கு கடும் நெருக்கடியை தந்தது. ஆட்டத்தின் முதல் பாதியில் பெல்ஜியம் அணியை கோல் அடிக்க விடாமல் தடுத்த மொராக்கோ, இரண்டாவது பாதியில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இரண்டு கோல்கள் அடித்து பெல்ஜியத்திற்கு அதிர்ச்சி அளித்தது. இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் மொரக்கோ அணி வெற்றி பெற்று பலம் வாய்ந்த பெல்ஜியம் அணியை வீழ்த்தியது.

பெல்ஜியம் அணியின் இந்த அதிர்ச்சி தோல்லி அந்நாட்டு ரசிகர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் அணி தோல்வி அடைந்த ஆத்திரத்தில் பெல்ஜியம் ரசிகர்கள் கடைகளை உடைத்து, வாகனங்களை தீக்கிரையாக்கி கலவரத்தை ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: அதிகரிக்கும் கொரோனா.. சீனாவில் மீண்டும் லாக்டவுன்.. வீதிகளில் இறங்கி மக்கள் போராட்டம்!

பல ரசிகர்கள் கையில் கம்பு போன்ற ஆயுதங்களை வைத்துக்கொண்டு தலைநகர் ப்ருசல்ஸ்சின் முக்கிய பகுதிகளில் வன்முறை செயல்களில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து காவல்துறை அங்கு துரிதமாக களமிறங்கி கலவரம் செய்த ரசிகர்களை கட்டுப்படுத்தினர். மேலும், யார் கலவரத்தில் ஈடுபட்டாலும் அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என ப்ரூசல்ஸ் மேயர் பிலிப்பே க்ளோஸ் உத்தரவிட்டுள்ளார். பெல்ஜியம் அணி தனது அடுத்த போட்டியில் குரோஷியா அணியை சந்திக்கிறது.

First published:

Tags: FIFA 2022, FIFA World Cup 2022