கார்ட்டூன் பெண் கதாப்பாத்திரங்களுக்கும் 'ஹிஜாப்' கட்டாயம் - ஈரான் அரசு உத்தரவு!

கார்ட்டூன் பெண் கதாப்பாத்திரங்களுக்கும் 'ஹிஜாப்' கட்டாயம் - ஈரான் அரசு உத்தரவு!

அயதுல்லா அலி கமேனி

ஈரானைப் பொறுத்தவரையில் பெண்கள் பொதுவெளியில் ஹிஜாப் அணியாமல் செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஈரான் நாட்டில் இஸ்லாமிய மத சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. அந்நாட்டின் தலைவராக இருக்கும் அயதுல்லா அலி கமேனி புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் கார்ட்டூன் பெண் கதாப்பாத்திரங்களுக்கும் கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

அந்நாட்டின் அரசு தொலைக்காட்சியில் இது குறித்து விளக்கமளித்த அவர், நாட்டில் இருக்கும் இளம் தலைமுறையினரிடையே ஹிஜாப் அணியும் பழக்கம் குறைந்து வருவதாக தெரிவித்துள்ளார். கற்பனை கதாப்பாத்திரங்களுக்கு ஹிஜாப் தேவையில்லை என்றாலும், இஸ்லாமிய முறையை இளம் தலைமுறையினர் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கில் இந்த புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அயதுல்லா அலி கமேனியின் இந்த புதிய உத்தரவு அந்நாட்டில் இருக்கும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். ஈரான் நாட்டுக்கும், மக்களுக்கும் தேவையான விஷயங்கள் ஏராளமாக இருக்கிற இந்த சூழலில், அயலதுல்லா அலி கமேனியின் இந்த உத்தரவு விஷமத்தனமானது என அவர்கள் சாடியுள்ளனர். உலக அளவில் ஈரான் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதாகவும், அதனை தீர்க்க அயதுல்லா அலி கமேனி உரிய நடவடிக்கை எடுக்காமல், பெண்கள் மீது ஒடுக்குமுறைகளை ஏவுவதில் கவனம் செலுத்துவதாகவும் ஈரான் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பத்திரிக்கையாளரும், சமூக ஆர்வலருமான மாசி அலினேஜாத் (Masih Alinejad) தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ’ஈரான் தலைவர் அலி கமேனி உத்தரவு நகைச்சுவை அல்ல, பெண்கள் மட்டுமல்லாது பெண் தேனீக்கள் கூட ஹிஜாப் அணிய வேண்டும் என கூறுவார்கள். உண்மையான பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதை விடுத்து, பெண்களை கட்டுப்படுத்த உத்தரவு பிறப்பிப்பது விஷமத்தனமானது. இதுபோன்றவர்கள் ஈரான் மக்களின் தலைவராக இருக்கிறார்கள்’ என சாடியுள்ளார்.

அராஸ் அசீஸி (Arash Azizi), அலி கமேனி மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தவில்லை என்பது இந்த உத்தரவு மூலம் தெரியவருவதாக தெரிவித்துள்ளார். எகிப்து ஆசிரியரான ஹீபா யோசரி (Heba Yosry), இந்த உத்தரவு அபத்தமானது எனக் கூறியுள்ளார். வளரும் பெண்கள் ஹிஜாப் அணியமாட்டார்கள் என்ற பயமா? அல்லது கார்ட்டூன் பெண் கதாப்பாத்திரங்கள் ஆண்களை மயக்கிவிடும் என்பதாலா? என கேள்விகளை எழுப்புள்ளார். இதுதான் இஸ்லாம் போதிக்கிறதா? என்றும் ஹீபா யோசரி வினவியுள்ளார்.

Also read... பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் டயர் ஷோரூம் - சியட் நிறுவனத்தின் புதிய முயற்சி!

ஆனால், ஈரான் திரைப்படங்களுக்கு அந்நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகள் இன்றளவும் நடைமுறையில் உள்ளன. ஆண், பெண் ஒருவரையொருவர் உடல்ரீதியாக தொட்டுக்கொள்ளக் கூடாது. சர்ச்சைக்குரிய பிரச்சனைகள் படங்களில் விவாதிக்கக்கூடாது. நாட்டின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்படுவதுடன், அந்த படம் வெளியிட தடையும் விதிக்கப்படும். பெண்கள் ஹிஜாப் அணியாத திரைப்படங்களை ஈரானில் வெளியிடக்கூடாது என அந்நாட்டைச் சேர்ந்த முன்னணி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றன.

ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனியும், வெளிநாட்டு படங்கள் நாட்டின் புனிதத்தை கெடுக்கும் வகையில் இருப்பதாகவும் கூறியிருந்தார். ஈரானைப் பொறுத்தவரையில் பெண்கள் பொதுவெளியில் ஹிஜாப் அணியாமல் செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும். அவர்களிடம் அபராதம் வசூலிக்கும் காவல்துறையினர் ஒருசில நேரங்களில் கைது செய்து சிறையிலும் அடைத்துவிடும் நிலை தற்போதும் நடைமுறையில் உள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: