பெண் பாதுகாப்புப்படை வீரர்களுக்கு சானிட்டரி பொருட்களை வழங்க இங்கிலாந்து அரசு முடிவு!

பெண் பாதுகாப்புப்படை வீரர்களுக்கு சானிட்டரி பொருட்களை வழங்க இங்கிலாந்து அரசு முடிவு!

மாதிரி படம்

சமீபத்தில் பேட்டியளித்த இங்கிலாந்து ஆயுதப்படை அமைச்சர் ஜேம்ஸ் ஹேப்பி, சுகாதார நடவடிக்கைகளின் அடிப்படையில் பெண் வீரர்களுக்கான சானிட்டரி பொருட்கள் கிடைக்கும் என்று அறிவித்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
இங்கிலாந்து நாட்டில் பெண் பாதுகாப்பு படையினருக்கு ஆயுதப் படைகளால் முதன்முறையாக சுகாதார நாப்கின்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைக்கு பெண் வீராங்கனைகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சமீபத்தில் பேட்டியளித்த இங்கிலாந்து ஆயுதப்படை அமைச்சர் ஜேம்ஸ் ஹேப்பி, சுகாதார நடவடிக்கைகளின் அடிப்படையில் பெண் வீரர்களுக்கான சானிட்டரி பொருட்கள் கிடைக்கும் என்று அறிவித்தார். பெண் பாதுகாப்புப்படை வீரர்கள் தங்கள் பொருட்களை பேக் செய்ய வேண்டிய இடத்தையும் முடிவுக்கு கொண்டுவந்ததாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பெண் வீராங்கனைகளுக்காக முன்பு இருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் அவர்களுக்கு அபத்தமான சூழ்நிலையாக இருந்தது என்று ஹேப்பி எடுத்துரைத்தார். வெளிநாடுகளில் பணியாற்றும் போது கூட பெண் பணியாளர்கள் தங்கள் சொந்த சுகாதார தயாரிப்புகளை எடுத்துச்செல்ல வேண்டியிருந்தது. ஆனால் இனி பெண்கள் எடுத்துச்செல்லும் சானிட்டரி பொருட்கள் எல்லாம் தீர்ந்துபோனால் அதற்காக அவர்கள் கவலையடைய தேவையில்லை. அந்த சூழ்நிலைகளில் பெண் வீரர்களுக்கு ‘மன அமைதி’ அளிக்க சுகாதார பொருட்கள் மற்றும் கூடுதல் உள்ளாடைகளைக் கொண்டிருக்கும் ஒரு ‘ப்ரொவிஷன் பாக்ஸ்’ அவர்களுக்கு கிடைக்கும் என்று ஹேப்பி விளக்கினார்.

விரைவில் ஸ்டாக் ஆர்டர்களை வைக்கும் போது பெண் வீரர்களுக்கு உணவுப் பொருட்களுடன் டம்பான்கள் (tampons) போன்ற சுகாதாரப் பொருட்களை கிடைக்கச் செய்வதில் ஆயுதப்படை கவனம் செலுத்தி வருவதாகவும், அதுவரை பெண் பாதுகாப்புப்படை வீரர்களுக்கு ப்ரொவிஷன் பாக்ஸ் ஒரு தற்காலிக அவசரகால தீர்வாக கிடைக்கும் என்றும் அந்நாட்டு ஆயுதப்படை அமைச்சர் ஹேப்பி உறுதிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து மேலும் பேசிய ஹேப்பி, “ஆயுதப்படையில் மொத்தம் 11% பெண்கள் பணிபுரியும் நிலையில், இராணுவ நடவடிக்கைகளின் போது பெண் வீரர்களுக்கு சுகாதார பொருட்கள் சரிவர கிடைப்பதில்லை. இதனால் அவர்கள் தங்களது சொந்த டம்பான்கள் மற்றும் பேட்களை எடுத்துச்செல்கின்றனர். என்னை பொருத்தவரை பீரியட்ஸ் என்பது காட்டயம் ஒரு அவசர கால நெருக்கடி இல்லை. ஒவ்வொரு 28 நாட்களுக்கும் ஒருமுறை இது நடக்கும் என்று நான் நினைக்கிறேன். எனவே இது எதிர்பாராத விஷயம் அல்ல. இதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.

Also read... ரயில் நிலையத்தில் கழிவறை குழாய் மூலம் குடிநீர் தொட்டியை நிரப்பிய அவலம்... இடைநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்!

இராணுவ மறுசீரமைப்பு முறைமையின் மூலம் டம்பான்கள் மற்றும் சானிட்டரி டவல்கள் வழங்கப்படுவதற்கான வழிமுறை எவ்வாறு இல்லை என்பது இன்னும் சங்கடமாக இருப்பதாக" அவர் தெரிவித்தார். எனவே, சாதாரணமாக சன்ஸ்கிரீன், டாய்லெட் பேப்பர் மற்றும் பூச்சி விரட்டும் கிரீம் போன்ற தனிப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் வீரர்களுக்கு வழங்கப்படுவதை போல பெண் வீரர்களுக்கும் சுகாதார பொருட்கள் இனி கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரிட்டிஷ் இராணுவ அதிகாரி ஒரு முன்னாள் காலாட்படை அதிகாரியாக இருந்தபோது அவருக்கு டிஸுஸ், பூட் பவுடர், பூச்சி விரட்டி மற்றும் லோஷன் உள்ளிட்ட அத்தியாவசிய தனிப்பட்ட பொருட்கள் போர்க்களத்தில் எவ்வாறு வழங்கப்பட்டன என்பதை நினைவுக்கூர்ந்தார். மேலும், இராணுவ மறுசீரமைப்பு சூழ்நிலையின் மூலம், ஒரு கடினமான செயல்பாட்டு சூழலில் உயிர்வாழ ஒரு போர்வீரருக்கான தேவையான அனைத்தும் வழங்கப்பட்டிருந்தாலும், பெண் சகாக்களுக்கு அவர்களின் பீரியட் காலகட்டத்தில் வழங்க வேண்டிய பாதுகாப்பு பொருட்கள் சரிவர வழங்கப்படுவதில்லை என்பது வேதனைக்குரிய விஷயம் என்று கூறியுள்ளார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: