ஹோம் /நியூஸ் /உலகம் /

அதிபர் ஜோ பைடன் இல்லத்தில் FBI அதிகாரிகள் அதிரடி சோதனை... 6 ரகசிய ஆவணங்கள் சிக்கின

அதிபர் ஜோ பைடன் இல்லத்தில் FBI அதிகாரிகள் அதிரடி சோதனை... 6 ரகசிய ஆவணங்கள் சிக்கின

ஜோ பைடன்

ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் இல்லத்தில் FBI அதிகாரிகள் நடத்திய சோதனையில் அங்கிருந்து 6 ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inter, IndiaWashingtonWashingtonWashington

அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. 2021 ஆம் ஆண்டு தேர்தலில் டொனால்டு ட்ரம்பை தோற்கடித்து அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார். மீண்டும் அதிபர் பதவிக்கான தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில் அதிபர் ஜோ பைடனுக்கு நெருக்கடி தரும் விதமான சம்பவம் அந்நாட்டில் நிகழ்ந்துள்ளது.

அமெரிகாவின் வில்மிங்டன் நகரில் உள்ள ஜோ பைடனின் இல்லத்தில் இருந்து FBI அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். 13 மணிநேரம் நடைபெற்ற இந்த சோதனையில் 6 ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஜோ பைடனிடம் இது போன்ற ரகசிய ஆவணங்கள் ஏற்கனவே கைப்பற்றப்பட்டுள்ளன. தற்போதைய அதிபரான ஜோ பைடன், கடந்த 2009 முதல் 2017ம் ஆண்டு வரை துணை அதிபராக இருந்தார். அந்த காலகட்டத்தில் அரசின் ரகசிய ஆவணங்களை டெலவேரில் உள்ள தனது இல்லத்துக்கும் அலுவலகத்துக்கும் ஜோ பைடன் எடுத்துச்சென்றதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக அமெரிக்காவின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட சோதனை அமைப்பான FBI பைடனின் இல்லத்தில் சோதனை நடத்தினர். கடந்தாண்டு நவம்பரிலேயே இது தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில், இரண்டு முறை ஆவணங்கள் அவரின் அலுவலகத்தில் கிடைத்தன. மூன்றாவது முறையாக கடந்த வெள்ளிக்கிழமை 13 மணி நேரம் FBI அதிகாரிகள் பைடனின் இல்லத்தில் சோதனை நடத்தினர். அதில் 6 ரகசிய ஆவணங்கள் சிக்கின.

அரசின் ரகசிய ஆவணங்கள் துணை அதிபர் பதவிக்காலம் முடிந்தும் பைடனின் இல்லத்துக்கு வந்தது எப்படி என அமெரிக்க எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். இந்த சூழலில் பிடிபட்ட ஆவணங்கள் குறித்து தனக்கு கவலையில்லை என்றும் அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Joe biden, USA