ஒரு காலத்தில் இரும்புத்திரை நாடு என அழைக்கப்பட்டது ரஷ்யா. அந்த அளவிற்கு அங்கு நடைபெறும் சம்பவங்கள் வெளியில் தெரியாமல் பாதுகாக்கும் அந்த நாடு. ஒருங்கிணைந்த ரஷ்யா பல துண்டுகளாக உடைந்த பிறகு அந்தப் பெயரை பெற்றுள்ள நாடு சீனா என்றே சொல்லலாம். சீனாவில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பான விபரங்களை அந்த நாடு அறிவித்தால் தவிர அங்கு நடக்கும் சம்பவங்கள் வெளி உலகிற்கு தெரியாது. அந்த அளவிற்கு ரகசியங்களை பாதுகாக்கிறது சீனா. அதோடு வெளிநாடுகளை, குறிப்பாக தனக்கு வேண்டாத நாடுகளை ரகசியமாக கண்காணிக்கும் வேலையையும் சீனா செய்து வருவதாக பல நாடுகளும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.
அந்த வகையில் உலகின் பல்வேறு நாடுகளில் ரகசியமாக காவல்நிலையம் அமைத்துள்ளதாக பல்வேறு நாடுகளும் குற்றம் சாட்டி வருகின்றன. கடந்த டிசம்பர் மாதம் கூட ஓட்டாவா நகரில் தன்னார்வ தொண்டு நிறுவனம் என்ற பெயரில் இயங்கும் அலுவலகத்தில் ரகசிய காவல்நிலையம் செயல்பட்டு வந்ததாக கனடா குற்றம் சாட்டியிருந்தது. இந்நிலையில் நியூயார்க் நகரில் சீனாவின் ரகசிய காவல்நிலையம் செயல்பட்டு வந்ததாக கூறி FBI அதிரடி சோதனை நடத்தியுள்ளது.
நியூயார்க் நகரில் சீனர்களுக்கு உதவுதற்காக சாங்க்ல் அசோசியேசன் என்ற தொண்டு நிறுவனம் செயல்படுகிறது. அங்கு ரகசிய காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் FBI இந்த சோதனையை நடத்தியுள்ளது. அந்தக் கட்டித்தின் மூன்றாம் தளத்தில் சீனாவின் ரகசிய காவலர்களுக்கான அலுவலகம் இயங்கி வந்ததாகவும், இந்த ரகசிய காவலர்கள் சீனாவி் ஃபுஜியான் மாகாணத்தை தலைமையகமாக கொண்டு செயல்படும் Code 11 Overseas என்ற காவல் அமைப்பிற்கு கட்டுப்பட்டது என்றும் FBI தெரிவித்துள்ளது. FBI அதிகாரிகள் அங்கு சென்ற போது அந்த அலுவலகம் மூடியிருந்தது என்றும், அங்கிருந்தவர்களிடம் விசாரித்த போது எப்போதாவது தான் அந்த அலுவலகம் திறந்திருக்கும் என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Safeguard defenders என்ற பெயரில் ரகசிய காவலர்கள் இயங்குவதாகவும், அவர்கள் வெளிநாடுகளில் தங்கியிருக்கும் சீனர்கள் சட்டரீதியான பிரச்னைகளை தீர்க்க உதவும் தன்னார்வலர்கள் என்ற பெயரில் தங்கள் நாட்டுக்க சாதகமாக பல்வேறு சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் ஏற்கனவே நியூயார்க் டைமஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இது போன்ற செயல்கள் அமெரிக்காவில் மட்டுமல்ல பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவின் தன்னார் தொண்டு நிறுவனத்தில் FBI அதிகாரிகள் நடத்திய சோதனைகள் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை சீனா தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.