முகப்பு /செய்தி /உலகம் / சீனா ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா வந்தது.. அடித்துச் சொல்லும் அமெரிக்கா... வெளியான அதிர்ச்சித் தகவல்..!

சீனா ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா வந்தது.. அடித்துச் சொல்லும் அமெரிக்கா... வெளியான அதிர்ச்சித் தகவல்..!

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

அமெரிக்க புலனாய்வு அமைப்பின் தகவலால் கொரோனா தொற்று எங்கிருந்து உருவானது என்கிற விவாதம் மீண்டும் கிளம்பியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • inter, Indiaamerica

சீனாவின் வூகான் ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவியதாக, எஃப்.பி.ஐ. இயக்குநர் கிரிஸ்டோபர் ரே தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார். கொரோனா பெருந்தொற்று எங்கிருந்து உருவானது என்பது குறித்து முதல் முறையாக அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ புலனாய்வு அமைப்பு பொதுவெளியில் கருத்து தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றின் பிறப்பிடத்தை உலக நாடுகள் கண்டறியும் முயற்சிகளை எடுத்தும் வரும் நிலையில், அவற்றை தடுக்கவும், குழப்பம் ஏற்படுத்தவும் சீனா முயற்சி மேற்கொண்டு வருவதாக எஃப்.பி.ஐ. இயக்குநர் கிரிஸ்டோபர் ரே குற்றஞ்சாட்டியுள்ளர். அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு சீனா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்க மின்சக்தி அமைப்பு வெளியிட்ட ஆய்வு அறிக்கை ஒன்றில், சீனாவின் வூகானில் உள்ள ஆய்வகத்தில் நடந்த சிறிய விபத்து காரணமாகவே, கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.

இதையும் படிங்கசீனாவில் அதிகரிக்கும் கொரோனா... பள்ளிகளை மூட உத்தரவிட்ட அரசு..!

அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ அமைப்புகள் அடுத்தடுத்து கொரோனா வைரஸ் குறித்து அறிக்கை வெளியிடுவது, கொரோனா தொற்று எங்கிருந்து உருவானது என்கிற விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.

First published:

Tags: CoronaVirus, Covid-19