பனிச்சரிவில் சிக்கிப் புதைந்த மகனை போராடி மீட்ட பனிச்சறுக்கு வீரர்...!

பனிச்சரிவில் சிக்கிப் புதைந்த மகனை போராடி மீட்ட பனிச்சறுக்கு வீரர்...!
  • Share this:
ஃபிரான்ஸில் பனிச்சரிவில் சிக்கிக் கொண்ட தன் மகனை பனிச்சறுக்கு வீரர் ஒருவர் போராடி மீட்டுள்ளார்.

ஃபிரான்ஸ், இத்தாலி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் பகுதியில் அமைந்துள்ளது ’சாமோனிக்ஸ்’. ஆண்டு முழுவதும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பனிச்சறுக்கு விளையாடுவதற்காகவே இங்கு வருகின்றனர்.

அப்படித்தான் பிரிட்டனைச் சேர்ந்த கில்லன் காம்ப்பெல் (Gillon Campbell) என்பவரும் தனது குடும்பத்தினருடன் சாமோனிக்ஸுக்கு வந்துள்ளார். குடும்பத்தோடு சேர்ந்து பனிச்சறுக்கு செய்ய முடிவெடுத்த அவர்கள், ஒரு குறிப்பிட்ட பாதையில் சறுக்கத் தொடங்கினர்.


காம்ப்பெல், அவரது மனைவி, அவர்களின் 11 வயது மகன் ஃபாக்ஸ் ஆகியோர் பனிச்சறுக்கு பாதையில் வேகமாக சறுக்கிச் சென்றபோது திடீரென ஃபாக்ஸ் காணாமல் போயுள்ளான். தனது மனைவியுடன் ஃபாக்ஸ் முன்னே சென்றிருக்கலாம் என நினைத்த காம்ப்பெல், விரைந்து சென்று அவரை அடைந்தபோது அங்கு ஃபாக்ஸ் இல்லை.

எங்கேயோ தவறு நடந்திருக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட காம்ப்பெல், தான் வந்த பாதையிலேயே மீண்டும் திரும்பி வந்திருக்கிறார். வழியெங்கும் ஃபாக்ஸைத் தேடிக்கொண்டே வந்த காம்ப்பெல் ஓரிடத்தில் பனிச்சரிவு ஏற்பட்டிருப்பதை கண்டு, உடனே தான் கையில் வைத்திருந்த டிரான்ஸீவர் கருவியை இயக்கியிருக்கிறார் காம்ப்பெல். அங்கு யாரோ சிக்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதை அந்தக் கருவி உணர்த்தவே, உடனடியாக உள்ளூர் மீட்புக் குழுவின் உதவியுடன் அங்கு தோண்டத் தொடங்கினார் காம்ப்பெல்.

கிட்டத்தட்ட ஒன்றரை மீட்டர் ஆழத்தில் தன் மகனின் தலை இருப்பதைக் கண்ட காம்ப்பெல், விரைந்து மீட்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். நல்வாய்ப்பாக ஃபாக்ஸின் உயிருக்கு ஆபத்து ஏதுமின்றி அவனை மீட்ட காம்ப்பெல், பனிச்சறுக்கு செய்பவர்கள் அதில் வரும் ஆபத்துகள் குறித்தும் அறிந்திருக்க வேண்டும் என்கிறார். மகன் காணவில்லை என்பதை அறிந்த சில நிமிடங்களிலேயே மின்னலென செயல்பட்ட காம்பெல், அரைமணிநேரத்தில் தனது மகனை மீட்டிருக்கிறார்.Also see:
First published: February 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading