உலகளவில் அதிக மக்களை பாதித்த அபாயகரமான தொற்று நோய்கள் என்னென்ன தெரியுமா?

கொரோனா

பெரியம்மை, காலரா என்று பல்வேறு காலகட்டங்களில் உலகை தொற்றுநோய்கள் சிதைத்து வரலாற்று கருப்புத் தடங்களைத் பதித்துச் சென்றுள்ளன.

 • Share this:
  கொரோனா மட்டுமின்றி இதற்கு முன்னதாக ஏராளமான தொற்று நோய்கள் அதிகமான மக்களை பாதித்துள்ளது. பொதுவாக ஒரு தொற்றுநோய் பரவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை சந்திக்க நேரிடுகிறது. அவ்வாறு, கடந்த காலங்களில் பரவிய தொற்றுநோய் உலகளவில் அறியப்பட்ட கொடிய நோயாகவும் பலமுறை வரலாற்றின் போக்கையே மாற்றியுள்ளது என்றும் கூறலாம். உலகம் முழுவதும் பரவிய நோய்கள் அதிகப்படியான தொற்று நோய்கள் என வரையறுக்கப்படுகின்றன. பல ஆண்டுகளாக ஏராளமான தொற்றுநோய்கள் மனித மக்கள்தொகையில் பெரும் சதவீதத்தை கொன்றுள்ளன. அவ்வாறு, மனித வரலாற்றின் போக்கை மாற்றிய சில கொடிய தொற்றுநோய்களைப் பற்றி காண்போம்:

  பெரியம்மை:

  1492ம் ஆண்டில் அமெரிக்காவில் பரவிய இந்த தொற்று நோய், மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 30% நோயாளிகளை கொன்றுள்ளது. இது ஏறக்குறைய 20 மில்லியன் மக்களை பாதிப்புக்குள்ளாக்கியது. இந்த தொற்று நோய் பரவல் காரணமாக ஐரோப்பியர்கள் வெற்று நிலத்தை குடியேற்ற மற்றும் அபிவிருத்தி செய்ய வழிவகுத்தது. இது உலகப் பொருளாதாரத்தில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியது.

  காலரா:

  இதுதான் இந்தியாவில் ஏற்பட்ட முதல் தொற்றுநோய். மேலும் 1817 முதல் 1823 வரை நீடித்தது. இந்த நோய் இந்தியாவிற்கு பிரிட்டிஷ் வீரர்கள் கொண்டு வந்தனர். இந்த பாக்டீரியாவால் மாசுபடுத்தப்பட்ட உணவு மற்றும் தண்ணீரை உட்கொண்ட பிறகு மக்களுக்கு பரவ தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இது உலகளவில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்றுள்ளது.

  எச்..வி / எய்ட்ஸ்:

  இது பொதுவாக ஒரு நபரின் நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கிறது. இந்த நோய் குறித்து 1981ம் ஆண்டு முதன்முதலில் தெரிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை இந்த நோய் தொடர்கிறது. இது பாலியல் ரீதியாக பரவும் ஒரு நோயாகும். இது உலகளவில் 75 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது.

  சார்ஸ் :

  கடுமையான சுவாச நோய்க்குறி எனப்படும் சார்ஸ் (SARS) கடந்த 2003ம் ஆண்டு சீனாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்டது. இது வெளவால்களிலிருந்து தோன்றி பூனைகள் மூலமாகவும் பின்னர் மனிதர்களிடமிருந்தும் பரவி, சுமார் 8,096 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாக நம்பப்படுகிறது. இது சுவாச துளிகளிலிருந்து இருமல் மற்றும் தும்மல் மூலம் பரவுகிறது.

  எபோலா :

  இந்த வைரஸ் முதன்முதலில் கினியாவில் 2014ல் பரவ தொடங்கியது. பின்னர் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பரவியது. இது 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று ஏற்படுத்தியுள்ளது.

  சார்ஸ்-CoV-2 - COVID19:

  நாவல் கொரோனா வைரஸ் எனப்படும் இந்த COVID-19, சுவாச பிரச்சினைகள், காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகளைக் கொண்டுள்ளது. மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கிறது. முக்கியமாக இது சுவாச துளிகளால் பரவுகிறது. COVID-19 என்ற கொரோனா வைரஸை அதிகாரப்பூர்வமாக ஒரு தொற்றுநோய் என்று உலக சுகாதார அமைப்பு கடந்த மார்ச் மாதம் 11ம் தேதி அன்று அறிவித்தது. தற்போது இந்த நோய் உலகளவில் 34.1 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது.

  இந்த நோய் அறிகுறி கொண்ட முதல் நபர் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 17ம் தேதி அன்று சீனாவின் ஹூபே மாகாணத்தில் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்த வைரஸ் உலகளவில் 163க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தற்போதுவரை இந்த நோய்க்கு  சரியான தடுப்பு மருந்து கிடைக்கவில்லை. மேற்கண்ட அனைத்து தொற்றுநோய்களும் மில்லியன் கணக்கில் மக்களை கொன்று மக்கள்தொகையை பெரிதும் பாதித்தது.

  மேலும், இது உலகப் பொருளாதாரத்தின் வீழ்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நோய்கள் பரவலாக இருப்பது மனிதர்களின் வாழ்க்கையை மிகவும் கடினமாக்கியுள்ளது. ஏனென்றால் ஏராளமானோர் வேலைகளை இழக்கிறார்கள், மற்றவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழக்கிறார்கள். ஒவ்வொரு தொற்றுநோயும் வரலாற்றில் ஒரு பெரிய திருப்பதையே உருவாக்கியுள்ளது. அதன் தாக்கங்களால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது.
  Published by:Karthick S
  First published: