ரத்த வெள்ளத்தில் காட்சியளித்த கடற்கரை ... பாரம்பரிய திருவிழாவில் கொல்லப்பட்ட 1,428 டால்பின்கள்

கொல்லப்பட்ட 1428 டால்பின்கள்

திருவிழாவின் ஒரு பகுதியாக படகுகள் மூலம் 1,428 டால்பின்களை பிடித்து வந்து கரையில் கொண்டு வந்து கத்தியை வைத்து வெட்டி கொன்று குவித்துள்ளனர்.

 • Share this:
  வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள போரோ தீவில் உள்ள கடற்கரை ரத்த வெள்ளத்தில் காட்சியளித்த வீடியோ இணையத்தில் அதிகம் பார்க்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் குறித்து அந்நாட்டு ஊடகங்களில் வெளியான செய்தியில், இது ஒரு பாரம்பரிய திருவிழாவின் கொண்டாட்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு அட்லாண்டிக் போரோ தீவு மக்கள் தங்கள் பாரம்பரிய திருவிழாவை கொண்டாடி உள்ளனர்.

  திருவிழாவின் ஒரு பகுதியாக படகுகள் மூலம் 1,428 டால்பின்களை பிடித்து வந்து கரையில் கொண்டு வந்து கத்தியை வைத்து வெட்டி கொன்று குவித்துள்ளனர்.

  ரத்த வெள்ளத்தில் காட்சியளித்த கடற்கரை


  பாரம்பரிய திருவிழாவில் கொல்லப்பட்ட 1428 டால்பின்கள்


  இதனால் கடற்கரைப் பகுதி நீர் முழுவதும், ரத்தம் சிந்தப்பட்டு சிவப்பு நிறத்தில் காட்யளிக்கின்றது.

  ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான டால்பின்கள் கொல்லப்பட்டதற்கு விலங்கு ஆர்வலர்கள் மற்றும் சுற்று சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  கடல் நீரை மாசுபடுத்துவதாகவும் , டால்பின்கள் அதிகம் கொல்லப்பட்டதற்கும் அதிகம் கண்டனம் எழுந்துள்ளது.

      

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published: