சர்வதேச கால்பந்து அமைப்பான ஃபிபா சார்பில் 22ஆவது உலக கோப்பை கால்பந்து போட்டிகள் தற்போது கத்தாரில் நடைபெற்று வருகின்றன. போட்டிகளை காண்பதற்காக உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் கத்தாரில் குவிந்துள்ளனர். சுமார் பத்து லட்சம் வெளிநாட்டு ரசிகர்கள் கத்தார் வருகை தந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
உலக கோப்பை கால்பந்து போட்டி முதல் முறைாயக மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறுகிறது. அதிலும் முதல் முறையாக உலக கோப்பை கால்பந்து போட்டிகள் குளிர் காலத்தில் நடைபெறுகிறது. மத்திய கிழக்கு நாடான கத்தாரில் கால்பந்தை ரசிப்பதற்கு ஈடாக சர்வதேச பயணிகள் கத்தாரை சுற்றிப்பார்ப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக கத்தார் தலைநகர் தோஹா நகருக்கு அருகில் உள்ள பாலைவனத்தை சுற்றிப்பார்க்க அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
கால்பந்து போட்டிகள் நடைபெறும் நேரம் போக மற்ற நேரங்களில் பாலைவனப் பகுதிக்கு வந்து சுற்றிப் பார்ப்பதோடு, ஒட்டக சாவரியும் மேற்கொள்கிறார்கள். இதனால் பாலைவனப்பகுதி இப்போதல்லாம் மிக பிசியாக காணப்படுகிறது. சாதாரண நாட்களில் ஒரு நாளைக்கு 20 முதல் 30 முறை மட்டுமே ஒவ்வொரு ஒட்டகமும் சவாரி செல்லும். ஆனால் இப்போது ஒரு நாளைக்கு ஒவ்வொரு ஒட்டகமும் 20 முதல் 300 முறை சவாரி செய்கிறது. ஒட்டகத்தின் முதுகில் அமர்ந்து சவாரி செய்து பாலைவனத்தின் மையப்பகுதிக்குச் சென்று பார்த்து ரசிப்பதில் சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
Read More : கத்தாரை கதிகலங்க வைக்கும் ஒட்டகக் காய்ச்சல்! உலகக்கோப்பை கால்பந்துக்கு அடுத்த சிக்கல்!
வரும் டிசம்பர் 18 ஆம் தேதி வரை உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற உள்ளன. இதனால் மேலும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் ஒட்டக சவாரி செய்ய வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உலககோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு கத்தாரின் சுற்றுலாவும் ஏற்றம் கண்டு வருவது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தருவதை முன்னிட்டு கத்தார் ரசு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதோடு, மற்ற அடிப்படை வசதிகளையும் செய்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: FIFA World Cup, FIFA World Cup 2022, Qatar, Tourism