ஒவ்வொரு துறையிலும் இருக்கும் பிரபலங்களுக்காக அவர்களது ரசிகர்கள் செய்யும் செயல்கள் அதிகம். அதில் ஒரு சில நகைச்சுவையாக இருக்கும். சில ஆச்சரியப்படுத்தும். சிலது செய்தவருக்கே வருத்தம் அளிக்கும். அப்படியான ஒரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.
2022 FIFA உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவின் வரலாற்று வெற்றியால் உற்சாகமடைந்த லியோனல் மெஸ்ஸியின் ரசிகர்கள் கால்பந்து ஜாம்பவான்களுக்கு மரியாதை மற்றும் தங்கள் அன்பை செலுத்துவதற்காக அவரது உருவத்தையும் பெயரையும் தங்கள் உடலில் பொறித்து வருகின்றனர்.
அத்தகைய ரசிகர்களில் ஒருவர் கொலம்பிய நாட்டை சேர்ந்த மெஸ்ஸியின் ரசிகரான மைக் ஜாம்ப்ஸ். அவர் தனது நெற்றியில் "மெஸ்ஸி" என்று பெரிய எழுத்துக்களில் பச்சை குத்தி அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.தனது சொந்த மகிழ்ச்சிக்காக இதை செய்து பதிவிட்டார். ஆனால், சமூக ஊடகங்களில் அவரது தோற்றம் குறித்து எதிர்மறையான கருத்துகளைப் பெற்ற பின்னர், இந்த முடிவுக்கு வருந்துவதாக அவர் இப்போது தெரிவித்துள்ளார்.
"பச்சை குத்தியதற்காக நான் வருந்துகிறேன், ஏனென்றால் அந்த செயல் எனக்கு நேர்மறையான விஷயங்களைக் கொண்டு வருவதற்குப் பதிலாக, அது தனிப்பட்ட முறையில் மற்றும் எனது குடும்பத்திற்காக நிறைய எதிர்மறையான விஷயங்களுக்கு வழிவகுத்தது. நான் இவ்வளவு சீக்கிரம் இதைச் சொல்வேன் என்று நினைக்கவில்லை, முதல் சில நாட்களில் நான் செய்ததைப் பற்றி நான் மிகவும் பெருமைப்பட்டேன், ஆனால் இப்போது நான் அதைச் செய்யாமல் இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறன். ”என்று ஒரு வீடியோவில் பகிர்ந்துள்ளார்.
பலர் இந்த டாட்டூவை இன்ஸ்டாகிராமில் லைக்குகளைப் பெறுவதற்கான மலிவான தந்திரம் என்று அழைத்தனர். சிலர் அதை முட்டாள்தனமான செயல் மற்றும் அபத்தம் என்று அழைத்தனர். நான் யாருக்கும் தீங்கு செய்யவில்லை, நான் சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை.ஆனால் என்னை கடுமையாக சாட்டுகிறார்கள் என்று வருத்தம் தெரிவித்தார். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று நான் கவலைப்படுவதில்லை இது எனது சந்தோஷத்திற்கானது என்று அர்ஜென்டினா தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: FIFA 2022, Football, Lionel Messi