’இதயம் நொறுங்கியது’..பிரபல யூடியூபர் மரணத்துக்கு காதலி வேதனை! ரசிகர்கள் அதிர்ச்சி

ஆல்பர்ட் டைர்லண்ட்

டென்மார்க்கைச் சேர்ந்த பிரபல யூ டியூபர் இத்தாலியில் உள்ள மலைத்தொடரில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்த போது மலையில் இருந்து தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

  • Share this:
டென்மார்க்கைச் சேர்ந்த பிரபல யூ டியூபர் இத்தாலியில் உள்ள மலைத்தொடரில் இருந்து தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.டென்மார்க்கைச் சேர்ந்த ஆல்பர்ட் டைர்லண்ட் (Albert Dyrlund), பிரபல யூ டியூபராக இருந்தார். மியூசிக் மற்றும் காமெடி ஸ்கெட்சஸ் வீடியோக்களை வெளியிட்டு வந்த அவருக்கு யூ டியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் சுமார் 20 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் இருக்கின்றனர். இத்தாலிக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஆல்பர்ட் டைர்லண்ட், வால்கார்டெனா பகுதியில் இருக்கும் பிரபல செசெடா மலைத் தொடரில் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராதவிதமாக மலையில் இருந்து தவறி விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.

அவரது உயிரிழப்பை இத்தாலி செய்தி நிறுவனமான ராய் நியூஸ் உறுதி செய்துள்ளது. ஆல்பர்ட் தவறி விழுந்த தகவல் கிடைத்தவுடன், மீட்பு பணிக்காக அவசரகால ஹெலிக்காப்டர் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், இறுதிவரை போராடியபோதும் அவரை காப்பாற்ற முடியவில்லை என அந்த செய்தி நிறுவனம தெரிவித்துள்ளது. ஆல்பர்ட் டைர்லண்ட்டின் இறப்பை அவரது தாயார் விபி ஜார்கர் ஜென்சனும் (vibe Jørger Jensen) உறுதி செய்துள்ளார். இறுதிச் சடங்கில் கூட்டம் கூடாதவாறு இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Also read : யப்பா என்னா அடி..! போலீஸ் முன்னிலையில் டேக்ஸி ஓட்டுநரை தாக்கிய இளம் பெண்.. தடுக்க வந்தவருக்கும் அடி..ஆல்பர்டின் காதலி மரியா ஆண்டர்சன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்ததாக தெரிவித்துள்ளார். ஆல்பர்டின் இறப்புச் செய்தி தன் இதயத்தை நொறுக்கிவிட்டதாக கூறியுள்ள அவர், இருவரின் இதயத்துடிப்புகள் பிரிந்திருப்பதை தாங்கிக்கொள்ள முடியவில்லை எனக் கூறியுள்ளார். இன்னும் அவரை காதலித்துக் கொண்டே இருப்பதாக தெரிவித்துள்ள மரியா, ஒவ்வொரு நாள் கண்மூடி தூங்கச் செல்லும் முன்பு, ‘I Love You’ எனக் கூறுவேன், எனக்கு நம்பிக்கை இருக்கிறது, நிச்சயம் ஆல்பர்ட் அதனை கேட்பார் என தெரிவித்துள்ளார். “Emoji", “Ula" மற்றும் “Summer" ஆகிய பாடல்களையும் ஆல்பர்ட் தயாரித்து வெளியிட்டுள்ளார்.

Also Read : சாலையை கடக்கும் குழந்தை.. வேகமாக வந்த கார் - நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோஇதேபோல், சீனாவைச் சேர்ந்த பிரபல சமூகவலைதளவாசி ஒருவரும் கிரேன் ஒன்றில் 160 அடி உயரத்தில் இருந்து எதிர்பாரதவிதமாக தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். 23 வயதான சியோ குயோமி (Xiao Qiumei), கிரேன் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். பணியில் இருக்கும்போதே 160 அடி உயரத்தில் இருந்து வீடியோ பதிவு செய்தபோது, எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். ஆனால், இதனை அவரது பெற்றோர்கள் மறுத்துள்ளனர். குயோமி சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டு வந்தாலும், வேலை நேரத்தில் வீடியோ பதிவு செய்யமாட்டார் என விளக்கமளித்துள்ளனர். சீனாவில் இருக்கும் டிக்டாக்கில் மிகவும் பிரபலமானவராக இருந்த குயோமி, நாள்தோறும் தவறாமல் வீடியோ பதிவேற்றி வந்துள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: