இந்தோனேசிய விமானம் விழுந்தது எப்படி? இந்திய விமானி செய்தது என்ன?

விபத்துக்குள்ளான விமானம் ஓட்டிய பவ்யே சுனேஜா தீபாவளிக்காக டெல்லி வர திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் அவரது இறப்பு குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

இந்தோனேசிய விமானம் விழுந்தது எப்படி? இந்திய விமானி செய்தது என்ன?
விபத்துக்குள்ளான விமானம்
  • News18
  • Last Updated: October 30, 2018, 9:55 AM IST
  • Share this:
இந்தோனேசியாவில் புறப்பட்ட விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில், டெல்லியை சேர்ந்த விமானி பவ்யே சுனேஜா உள்ளிட்ட 189 பேர் உயிரிழந்தனர்.

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து 721 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பங்க்கல் பினாங்குக்கு லயன் ஏர் நிறுவனத்தின் JT610 விமானம், திங்கள் காலை 6.20 மணிக்கு புறப்பட்டது. கடந்த ஆகஸ்டில் தன் பயணத்தை தொடங்கிய அந்த புத்தம்புது போயிங் 737 மேக்ஸ் விமானத்தில் ஊழியர்கள் உள்ளிட்ட 189 பேர் பயணம் செய்தனர்.

விமானத்தை, டெல்லி, மயூர் விஹார் பகுதியில் வசிக்கும் 31 வயது விமானி பவ்யே சுனேஜா, மற்றும் இத்தாலியை சேர்ந்த துணை விமானி ஹர்வினோ ஆகியோர் இயக்கினர். 2009-ல் விமானியான பவ்யே சுனேஜாவுக்கு 6 ஆயிரம் மணி நேரம் விமானத்தை இயக்கிய நீண்ட அனுபவம் உண்டு. துணை விமானிக்கும் 5 ஆயிரம் மணி நேரம் அனுபவம் இருந்தது.


விமானி கோரிக்கை:

இந்நிலையில், விமானம் புறப்பட்ட மூன்று நிமிடங்களுக்குப் பின், கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்ட பவ்யே சுனேஜா உடனடியாக விமான நிலையம் திரும்ப அனுமதி கேட்டார். அதற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், பதிமூன்றாவது நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையின் ரேடார் திரையில் இருந்து விமானம் மறைந்தது.

அதையடுத்து, விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது. இது குறித்து அறிந்த உறவினர்கள், விமான நிலையத்திற்கும், இந்தோனேசிய தேடுதல் மற்றும் மீட்பு முகமை அலுவலகம் முன்பும் கண்ணீருடன் கூடினர்.நடுக்கடலில் விமானம் விழுந்து விபத்து:

இதனிடையே ரேடாரில் இருந்து விமானம் மறைந்த இடத்திற்கு இந்தோனசிய தேடுதல் மற்றும் மீட்புத் துறையினர், சென்று தேடியபோது கடலில் அமைந்துள்ள அரசு சுத்திகரிப்பு ஆலை பகுதியில், இருக்கைகள் உள்ளிட்ட சில உதிரி பாகங்கள், பயணிகளின் சில ஆவணங்களும் கிடைத்தன. சற்று தொலைவில் நடுக்கடலில், விமான எரிபொருள் படலம் மிதந்ததைப் பார்த்த மீட்புத்துறையினர் விமானம் விபத்தில் சிக்கியதை உறுதிப்படுத்தினர்.

புறப்பட்ட சில நிமிடத்தில் 5 ஆயிரம் அடி உயரம் சென்று, கடல் மேல் 3650 அடியில் பறந்தபோது அது மேற்கு ஜாவா அருகே கடலில், 98 அடி முதல் 115 அடி ஆழத்தில் விழுந்ததாகக் விமான நிறுவனம் கூறியுள்ளது. இவ்விமானத்தில் கடந்த திங்களன்று கோளாறு ஏற்பட்டுள்ளது. விமானத்தின் கறுப்புப்பெட்டி கிடைத்தபிறகே முழு காரணம் தெரியவரும். ஒரு பக்கம் மட்டும் அமரக்கூடிய இந்த விமானத்தை, போயிங், கடந்த 2017ல்தான் அறிமுகப்படுத்தியது.

2011ல், இந்நிறுவனத்தில் சேர்ந்த பவ்யே, விரைவில் இந்தியா திரும்ப இருந்தார். இந்தோனேசியாவில் உள்ள இந்திய தூதரகம் பவ்யே சுனேஜா உயிரிழந்ததை ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த குறைந்த கட்டண விமானத்தில் மூன்று குழந்தைகள், இரு வெளிநாட்டினர் மற்றும் அந்நாட்டு நிதித்துறை அதிகாரிகள் 20 பேர் பயணித்தனர்.

ஆயிரக்கணக்கான தீவுகளாக பிரிந்துள்ள இந்தோனேசியாவில் விமானப்போக்குவரத்து முக்கியமானது. இந்தோனேசியாவில் அடிக்கடி விமான விபத்துகள் நிகழ்கின்றன. கடந்த ஆகஸ்டில் கிழக்கு இந்தோனேசியாவில் நடந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

உலகில் இந்த ஆண்டின் நிகழ்ந்த மிகப்பெரிய விமான விபத்து இதுவாகும். கடந்த ஆகஸ்டில் அமெரிக்காவில் போயிங் விமானம் விபத்தில் சிக்கியதில், 149 பேரும், மே மாதத்தில் சீனாவின் செங்டுவில் நிகழ்ந்த விபத்தில் 119 பேரும் பலியாயினர்.

பவ்யே யார்?

விமானத்தை, டெல்லி, மயூர் விஹார் பகுதியில் வசிக்கும் 31 வயது விமானி பவ்யே சுனேஜா, 2009 ஆண்டு விமானிக்கான லைசன்ஸ் பெற்றார். 2011 ஆம் ஆண்டு முதல் லயன் ஏர் விமானத்தில் பணியாற்றிவந்தார். இவருக்கு கடந்த 2016ல் திருமணம் நடந்தது. ஆண்டுதோறும் தீபாவளியின் போது, குடும்பத்துடன் கொண்டாடும் பவ்யே சுனேஜா இந்த ஆண்டும் டெல்லி வர திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் அவரது இறப்பு குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

இதையும் பாருங்களேன்..
First published: October 30, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading