ஹோம் /நியூஸ் /உலகம் /

சர்வதேச பயண தடையை நீக்கிய ஆஸ்திரேலியா - எமோஷ்னலாக காட்சியளித்த சிட்னி ஏர்போர்ட்!

சர்வதேச பயண தடையை நீக்கிய ஆஸ்திரேலியா - எமோஷ்னலாக காட்சியளித்த சிட்னி ஏர்போர்ட்!

எமோஷ்னலாக காட்சியளித்த சிட்னி ஏர்போர்ட்

எமோஷ்னலாக காட்சியளித்த சிட்னி ஏர்போர்ட்

ஆஸ்திரேலிய அரசின் கடுமையான கொரோனா லாக்டவுன் காரணமாக தொற்று ஒரு சில மாதங்களில் கட்டுப்படுத்தப்பட்டாலும், மற்ற நாடுகளை போலவே தொற்று குறைவதும் அதிகரிப்பதுமாகவே இருந்த காரணத்தால் தனது சர்வதேச எல்லையை திறப்பது குறித்து அந்நாட்டு அரசு முடிவெடுக்க முடியாத நிலையில் இருந்தது.

மேலும் படிக்கவும் ...
  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக உலகை தொடர்ந்து அச்சுறுத்தி வந்தாலும் பல நாடுகளில் கொரோனா கட்டுக்குள் இருப்பது உலக மக்களை சற்று நிம்மதியடைய செய்து இருக்கிறது. சுமார் 18 மாதங்களாக மூடி வைத்திருந்த தங்கள் நாட்டின் சர்வதேச எல்லைகளை பல நாடுகள் மீண்டும் திறந்துள்ளன. அந்த வகையில் சுமார் 600 நாட்களுக்கு பிறகு ஆஸ்திரேலியாவின் சர்வதேச எல்லை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அந்நாட்டின் தலைநகரான சிட்னி ஏர்போர்ட்டில் உணர்ச்சிகரமான பல காட்சிகளை காண முடிந்தது. தங்கள் அன்புக்குரிய நண்பர்கள் மற்றும் உறவினர்களை நேரில் பார்க்க முடியாமல் தவித்த பலர், சிட்னி ஏர்போர்ட்டில் மீண்டும் அவர்களை நேரில் பார்த்து கண்ணீர் மல்க வரவேற்ற நிகழ்வுகள் கண்டவர்களை நெகிழ செய்தன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக தனது சர்வதேச எல்லைகளை ஆஸ்திரேலியா அரசு மூடியது.

இதனால் வெளிநாடுகளுக்கு சென்றிருந்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த பலர், அந்த நாடுகளிலேயே சிக்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் கடந்த பல மாதங்களாக, ஆஸ்திரேலியர்கள் அனுமதியின்றி வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் அனந்தில் உள்ள பல குடும்பங்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களை பார்க்க முடியாமல் தவித்து வந்தனர்.

ஆஸ்திரேலிய அரசின் கடுமையான கொரோனா லாக்டவுன் காரணமாக தொற்று ஒரு சில மாதங்களில் கட்டுப்படுத்தப்பட்டாலும், மற்ற நாடுகளை போலவே தொற்று குறைவதும் அதிகரிப்பதுமாகவே இருந்த காரணத்தால் தனது சர்வதேச எல்லையை திறப்பது குறித்து அந்நாட்டு அரசு முடிவெடுக்க முடியாத நிலையில் இருந்தது. இதனால் சுமார் 20 மாதங்களாக அந்நாட்டு குடிமக்கள் பலர் ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய முடியாமல் தவித்து வந்தனர். இதனிடையே கொரோனா கட்டுக்குள் உள்ளதை அடுத்து தற்போது அந்நாட்டின் சர்வதேச எல்லைகள் விமான பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது.

ஒன்றரை வருடங்களாக தனது மகனை பார்க்க முடியாமல் தவித்து வந்த டிம் டர்னர் என்பவர் கூறுகையில், முதல் முறையாக பல மாதங்களுக்கு பிறகு தனது மகனுடன் ஒன்றிணைந்து உள்ள தருணம் மிகவும் அழகானது மற்றும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்ததாக கூறி இருக்கிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோய்வாய்ப்பட்ட தாயை பார்க்க இங்கிலாந்தில் இருந்து, ஆஸி., திரும்பியுள்ள ஜூலி என்பவர் கூறுகையில், விமானம் கீழிறங்கிய போது அழாமல் இருக்க மிகவும் முயற்சி செய்ததாக கூறினார்.

Also read... இனி அமெரிக்காவிலும் தீபாவளிக்கு பொது விடுமுறை - அமெரிக்க சட்டசபையில் மசோதா தாக்கல்!

என் அம்மாவை கண்டதும் அவரின் கைகளை பிடிக்கவும், அவரை தழுவி கொள்ளவும் என்னால் காத்திருக்க முடியாது என்று கண்ணீர் மல்க உணர்ச்சிபூர்வமாக ஜூலி கூறிய வார்த்தை விமனநிலையத்தில் இருந்தவர்களை கண்கலங்க செய்தது. ஆஸ்திரேலியாவில் இருந்து இப்போது பலர் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.

அப்படி லாஸ் ஏஞ்சல்ஸிற்கு விமானம் என்ற வந்த ஒருவர் கூறுகையில், சுமார் 2 வருட இடைவெளிக்குப் பிறகு குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாட அமெரிக்காவிற்கு செல்வதை நினைத்தால் உற்சகமாக இருக்கிறது என்று உணர்ச்சிபொங்க கூறினார். இதனிடையே ஆஸ்திரேலியர்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களது அன்பானவர்களுடன் மீண்டும் இணைவதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று ஆஸ்திரேலியன் ஏர்லைன் Qantas-ன் தலைமை நிர்வாக அதிகாரியான ஆலன் ஜாய்ஸ் குறிப்பிட்டார்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Airport, Sydney